இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சோமேட்டோ உலகம் முழுவதும் 13 நாடுகளில் தனது சேவையை வழங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனம் ‘பெற்றோர் கடமை விடுமுறை’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, குழந்தை பிறக்கும் ஆண், பெண் இருவருக்கும் ரூ.70,000 மற்றும் 6 மாத விடுமுறை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

‘சொந்த வாழ்க்கையின் இலக்கும், அலுவலக வாழ்க்கையின் இலக்கும் எப்போது அர்த்தமுள்ளதாக இருக்கிறதோ அப்போதுதான் ஊழியர்கள் சிறந்த வேலையை அளிப்பார்கள்’ என்று இது குறித்து சோமேட்டோ தரப்பில் விளக்கமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகப்பேறு காலங்களில் விடுமுறை அளிப்பதில் பெண்களுக்கு என்ன சலுகை வழங்கப்படுகிறதோ, அதே சலுகையை ஆண் ஊழியர்களுக்கும் வழங்க உள்ளோம். இந்த சலுகை, குழந்தையை தத்தெடுப்பவர்களுக்கும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும், வாடகைத்தாயாய் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.