Home க்ரைம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாய்: பதற வைக்கும் சம்பவம்!

குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாய்: பதற வைக்கும் சம்பவம்!

இரண்டாவது கணவருடன் வாழ இடையூறாக இருந்த குழந்தையை தாயே கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் : இரண்டாவது கணவருடன் வாழ இடையூறாக இருந்த குழந்தையை தாயே கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட்டை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் – காவியா தம்பதி. கடந்த  2017 திருமணமான இவர்களுக்கு நான்கு வயதில் தருண் என்ற மகன் இருந்துள்ளார். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக ராமச்சந்திரனை பிரிந்த காவியா குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

murder

இந்நிலையில்,காவியாவுக்கு, தியாகராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து தியாகராஜனை திருமணம் செய்து கொண்டு மகனுடன் வசித்து வந்துள்ளார் காவியா. புதுவாழ்க்கைக்குக் குழந்தை இடையூறாக இருப்பதாக எண்ணிய காவியா மற்றும் அவரது இரண்டாவது கணவர் தியாகராஜன் கடந்த  13-ந்தேதி மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தருணை, அண்டாவில் உள்ள தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர்.  பின்னர் குழந்தையை மூட்டையில் கட்டி எடுத்துக்கொண்டு சென்று பாலாற்றில்  புதைத்துள்ளனர். பின்னர் எதுவும் தெரியாததுபோல் இருந்துள்ளனர். 

crime

இதை தொடர்ந்து காவியாவை காண வந்த அவரது தாயார்  தருண் பற்றி கேட்க காவியா முன்னுக்கு முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து அவர் தாய் வற்புறுத்திக் கேட்கக் குழந்தையைக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் இது குறித்து தென்கடப்பந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் அதியமானுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதியமான் அளித்த புகாரின் அடிப்படையில் காவியாவை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து தலைமறைவான தியாகராஜனை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பை தொடர வேண்டும்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

கிரானைட் முறைகேடு தொடர்பாக வழக்கை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரித்தது. விசாரணையின் முடிவில் அறிக்கை தாக்கல் செய்த சகாயம், கிரானைட் முறைகேட்டால் அரசுக்கு பல கோடி ரூபாய்...

டெக்கரேட்டர் தூக்கிட்டு தற்கொலை – கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை

தஞ்சாவூர் தஞ்சையில் டெக்கரேஷன் தொழில் செய்து வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி...

கடலூர், நாகை, காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை புயலாக வலுப்பெறும் என்றும் இதற்கு புரெவி என்று பெயரிடப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம்...

“மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்” – உதயநிதி ஸ்டாலின் பேட்டி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக திமுக, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னரே பரப்புரையை...
Do NOT follow this link or you will be banned from the site!