குளிர் காலத்திற்கேற்ற சத்தான  மட்டன் பாயா சூப்! 

ஜில்லென்று வீசும் மிதமான குளிரில் அதிகாலை எழுந்திருக்க எல்லோருக்கும் சோம்பேறித்தனமாக இருக்கும்! இன்னும் கொஞ்ச நேரம் போர்வையை இழுத்திப் போர்த்தி தூங்கினால் சுகமாக இருக்கும் என்று தோன்றுவது எல்லோருக்கும் பொதுவானதுதான்! சிலர்,ஆபிஸ்க்கு லீவைப் போட்டுட்டு ஹாயாக நாள் முழுக்க தூங்கலாம் என்றுகூட ஆசை இருக்கும்.குளிர் காலம் முடியுறவரைக்கும் இதுதான் நிலைமை.  

ஜில்லென்று வீசும் மிதமான குளிரில் அதிகாலை எழுந்திருக்க எல்லோருக்கும் சோம்பேறித்தனமாக இருக்கும்! இன்னும் கொஞ்ச நேரம் போர்வையை இழுத்திப் போர்த்தி தூங்கினால் சுகமாக இருக்கும் என்று தோன்றுவது எல்லோருக்கும் பொதுவானதுதான்! சிலர்,ஆபிஸ்க்கு லீவைப் போட்டுட்டு ஹாயாக நாள் முழுக்க தூங்கலாம் என்றுகூட ஆசை இருக்கும்.குளிர் காலம் முடியுறவரைக்கும் இதுதான் நிலைமை.  

mutton paya

இந்த குளிர் காலத்தை இன்னும் ஸ்பெஷல் ஆக்க வேண்டும் இந்த மட்டன் பாயா சூப்பை ட்ரை பண்ணிப் பாருங்க.இந்த பாயா சூப் என்று சொல்லப்படும் எலும்பு குழம்பு, நம் உடலிலுள்ள எலும்புகளை வலுவாக்கும்,குறிப்பாக குளிர் காலங்களில் ஏற்படும் மூட்டு வலிக்கு நல்ல பலனைத்தரும். 
முதல்பாயா பிறந்த கதை:

மட்டன் பாயா சூப் இந்திய துணை கண்டத்தில் ஒரு பாரம்பரிய உணவாகும்! பாயா என்றால் ஹிந்தி மற்றும் உருதுமொழிகளில் கால்கள் என்று அர்த்தம். இதனை மாடு அல்லது ஆடு இவற்றின்  கால்களை வைத்து செய்யப்படும் ஒரு உணவு ஐட்டம் .இந்த இரண்டில் எதை பயன் படுத்தலாம் என்பது உங்கள் விருப்பம் . இந்த பாயா உணவு தெற்கு மற்றும் மத்திய ஆசிய உணவு வகைகளின் கலவையிலிருந்து உருவானது! மத்திய ஆசியாவில் இதனை ‘பச்சா’ என்று கூறுகின்றனர். லாகூர்,தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் மற்றும் லக்னோவின் இஸ்லாமிய சமையல்காரர்களால் இந்த செய்முறையை தழுவியதால் இந்த பாயா உணவு உள்ளூர் உணவுகளின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. 

mutton paya soup

வரும் ஞாயிற்றுக்கிழமை சுவையும் ஆரோக்யமும் கொண்ட மட்டன் பாயாவை செஞ்சு பார்த்திட்டு கொண்டாடுங்க.

Most Popular

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி...

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...