Home தமிழகம் குளிக்க வெந்நீர் வைத்த தாய்...கண் இமைக்கும் நொடியில் 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி!

குளிக்க வெந்நீர் வைத்த தாய்…கண் இமைக்கும் நொடியில் 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி!

மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட  குழந்தை, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாகப் பலியாகியது. 

குளிக்க வெந்நீர் வைத்த தாய்...கண் இமைக்கும் நொடியில் 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி!

திருவொற்றியூர் சண்முகபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்-ஜனனி  தம்பதி. இவர்களுக்கு  சிவானிஸ்ரீ  என்ற மகள் உள்ளார். மணிகண்டன் அதே பகுதியில் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இந்நிலையில் சிவாணிஸ்ரீயை குளிக்க வைக்க வெந்நீர் வைத்து எடுத்துவந்த  ஜனனி, வேறு வேலை இருந்ததால் வெந்நீரை வராண்டாவில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த சிவாணிஸ்ரீ வெந்நீர் இருந்த பகுதியில் விளையாடி கொண்டே சென்று எதிர்பாராத விதமாக வெந்நீர் இருந்த வாளிக்குள் விழுந்துள்ளார்.

ttn

விழுந்த சில நொடியில் குழந்தை வீறிட்டு கத்த, அங்கு ஓடி வந்த தாய் ஜனனி அதிர்ச்சியடைந்துள்ளார்.  இதையடுத்து படுகாயம் அடைந்த குழந்தை சிவாணிஸ்ரீ  சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்பு அங்கிருந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட  குழந்தை, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாகப் பலியாகியது. 

ttn

குழந்தை இறந்த செய்தி கேட்டு அதன் பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை உருக்குலையச் செய்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

குளிக்க வெந்நீர் வைத்த தாய்...கண் இமைக்கும் நொடியில் 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

மதுரை மருத்துவ கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா !

மதுரை மருத்துவ கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்...

தமிழகத்தில் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி உள்ளது : கமல் ஹாசன் ட்வீட்!

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராம சபை கூட்டத்தை நடத்த அனுமதி கோரி கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒன்றியம் ராஜேந்திர பட்டினம் கிராம ஊராட்சித் தலைவர் சுரேஷ்...

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல்!

மத்திய பிரதேசத்தின் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். தமிழக...

‘நகையே இல்லாமல் நகைக்கடன்’… கூட்டுறவு வங்கியில் அரங்கேறிய பலே மோசடி அம்பலம்!

குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நகையே இல்லாமல் 3 கோடி ரூபாய்க்கு மேல் நகைக் கடன் வாங்கி மோசடி செய்யப்பட்டு இருப்பது அம்பலமாகியுள்ளது. தமிழக...
TopTamilNews