Home அரசியல் குற்றாலத்திற்கு ஏன் வந்திருக்கிறோம்? தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்

குற்றாலத்திற்கு ஏன் வந்திருக்கிறோம்? தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்

குற்றாலத்திற்கு ஏன் வந்துள்ளோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ  தங்க தமிழ்ச்செல்வன் விளக்கமளித்திருக்கிறார்.

நெல்லை: குற்றாலத்திற்கு ஏன் வந்துள்ளோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ  தங்க தமிழ்ச்செல்வன் விளக்கமளித்திருக்கிறார்.

முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததை அடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் எம்.எல்.ஏ உத்தரவிட்டார். இதனையடுத்து சபாநாயகரின் உத்தரவிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் இந்த வழக்கானது 3-வது நீதிபதியான சத்திய நாராயணனிடம் சென்றது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இதனையடுத்து எம்.எல்.ஏக்கள் 18 பேரும் குற்றாலத்தில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குற்றாலம் கூவத்தூராக மாறி இருக்கிறது.

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரவேண்டும் என்பதற்காக பாபநாசம் சென்று தாமிரபரணி புஷ்கர நிகழ்வில் புனித நீராட இருக்கிறோம். இரண்டு நாட்கள் குற்றாலத்தில் தங்குவோம் என்றார். அதன் பிறகு தாமிரபரணி புஷ்கர நிகழ்வில் நீராட அவர்கள் பாபநாசம் புறப்பட்டு சென்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“பெட்ரோல், கேஸ் விலை ஏத்துனா எங்களுக்கு ஓட்டு விழாதா” :அண்ணாமலையின் ஓவர் கான்ஃபிடன்ட்!!

சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஏழ்மையில் தகிக்கும் தமிழகம்.. கமல் ஆதங்கம்!

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் உரிய ஆவணமில்லாத ரூ.2.77 லட்சம் பறிமுதல்!

தூத்துக்குடி தூத்துக்குடிக்கு உரிய ஆவணமின்றி கேரள வியாபாரிகள் எடுத்து வந்த 2 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ராஜேந்திரபாலாஜிக்கு செக் வைத்த முதல்வர்!

மாஃபா என்ற நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் பாண்டியராஜன், பாஜகவின் இணைந்து அரசியில் வாழ்க்கையை ஆரம்பித்தவர், விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது அதில் இணைந்து, 2009ல் தேமுதிக சார்பில் விருதுநகரில் களமிறங்கி...
TopTamilNews