Home சினிமா 'குறும்படம் போட்டு காமிக்க சொல்லுவன்': வனிதாவின் அடுத்த டார்கெட் இவர் தானா?

‘குறும்படம் போட்டு காமிக்க சொல்லுவன்’: வனிதாவின் அடுத்த டார்கெட் இவர் தானா?

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 தொடங்கி 53 நாட்கள் ஆகியுள்ளது. வனிதா, மீரா வெளியேறிய பின்பு நிகழ்ச்சியில் சுவாரசியம் இல்லாத காரணத்தினால் போர் அடிப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். அதனால் பிக் பாஸ் டாஸ்க் என்ற பெயரில் மீண்டும் வனிதாவை உள்ளே அனுப்பி ஆட்டத்தை விறுவிறுப்பாகியுள்ளனர். 

இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் இன்றைக்கான டாஸ்க்காக ஆண்கள் மற்றும் பெண்கள் என்று இரு அணிகளாகப் பிரிந்து விவாதம் செய்வது போல் தெரிகிறது. அப்போது வனிதா, தர்ஷனிடம் ‘உன்னோட இதயத்தில் வைத்து கிழித்தல் மட்டுமே அந்த வலி உனக்கு தெரியும். உனக்கு எதுக்கு இவளோ கோபம் வருகிறது’ என்று கேட்க உடனே தர்ஷன் எனக்கு வரவேயில்லை என்று கூறுகிறார். 

அதைத்தொடர்ந்து வனிதா, ‘நான் குறும்படம் போட்டு காமிக்க சொல்லிடுவன்’ என்று சொல்ல உடனே எப்போதும் அமைதியாக இருக்கும் சாண்டி, லாஸ்லியாவே அவரை எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். இதிலிருந்து வனிதாவின் அடுத்த டார்கெட் தர்ஷன் என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது.   

மாவட்ட செய்திகள்

Most Popular

ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் குழப்பம்

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தினால் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல்...

5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை- ராதாகிருஷ்ணன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், “சுகாதாரப் பணியாளர்களில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முன்களப் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளவர்கள் தடுப்பூசி...

அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணம்! அவசர கதியில் அரங்கேறிய நாடகம்

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக களமிறங்கிய அதிமுக, கடந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களை பெற்றது. கடந்த புதன்கிழமையோடு விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 8,240...

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், தொழிலாளி பலி!

விருதுநகர் ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம்...
TopTamilNews