Home தமிழகம் குறட்டை விட்டு தூங்கிய தாய்: ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை; விழுப்புரத்தில் பரபரப்பு!

குறட்டை விட்டு தூங்கிய தாய்: ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை; விழுப்புரத்தில் பரபரப்பு!

ஓடும் பேருந்திலிருந்து 9 மாத பெண் குழந்தை தவறிவிழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: ஓடும் பேருந்திலிருந்து 9 மாத பெண் குழந்தை தவறிவிழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை மடியில் வைத்தபடி தூங்கிய தாய் 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச்  சேர்ந்தவர் சரண்யா இவர் தன்னுடைய 9 மாத பெண் குழந்தையுடன் விழுப்புரத்திலிருந்து பெங்களூரில் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால் குழந்தையை மடியில் வைத்தபடி சரண்யா தூங்கத் தொடங்கியுள்ளார். 

பேருந்தின் வெளியே விழுந்த குழந்தை

செங்கம் அடுத்த பாச்சல் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, குழந்தையானது சரண்யாவின் மாடியிலிருந்து தவறி பேருந்தின் வெளியே விழுந்துள்ளது. ஆனால்  குழந்தை விழுந்தது கூட தெரியாமல் சரண்யா தூங்கிக் கொண்டிருக்க, பின்னால் லாரி ஒன்று வந்துள்ளது. லாரியின் ஓட்டுநர், குழந்தை கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

மருத்துவமனையில் சிகிச்சை

இதையடுத்து, லாரி ஓட்டுநர் பேருந்தை முந்திச்சென்று பேருந்தை நிறுத்த சொல்லி நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு  சாலையில் கிடந்த குழந்தை காயங்களுடன் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குழந்தைக்குச் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

காவலர் வீரவணக்க நாள் – சேலம் சரக டிஐஜி மரியாதை

காவலர் வீரவணக்க நாளையொட்டி, தர்மபுரி மாவட்ட எஸ்.பி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, உயிரிழந்த காவலர்களுக்கான நினைவுச்சின்னம் பகுதியில் சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ஜல்லிக்கட்டு நினைவு சிலையை முதல்வர் பழனிசாமி நாளை திறக்கிறார்!

விராலிமலை ஜல்லிக்கட்டு நினைவு சிலையை முதல்வர் பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைந்த நிலையில் அவரின் கன்னியாகுமரி உள்ளிட்ட...

“உயிர் நீத்த காவல்துறையினர் அனைவருக்கும் வீரவணக்கம்” – மு.க ஸ்டாலின் பதிவு!

இன்று காவலர் வீர வணக்கம் தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாட்டுக்காக வீர தீர செயல்களில் ஈடுபட்டு உயிர் நீத்த...

கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை!

கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தாலும்,...
Do NOT follow this link or you will be banned from the site!