Home தமிழகம் குரூப் 2 தேர்வு முறைகேடு.. காவலர் சித்தாண்டி தலைமறைவு : 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !

குரூப் 2 தேர்வு முறைகேடு.. காவலர் சித்தாண்டி தலைமறைவு : 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவரது வீட்டில் தேர்வு எழுதிய 4 பேர் மாநில அளவில் ரேங்க் எடுத்துள்ளதாகப் புகார் எழுந்தது.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, முறைகேட்டில் சிக்கிய அனைத்து நபர்களும் வாழ்நாள் முழுவதும் இந்த தேர்வுகளை எழுத முடியாத படி  டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்விலும் குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. 

ttn

அதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவரது வீட்டில் தேர்வு எழுதிய 4 பேர் மாநில அளவில் ரேங்க் எடுத்துள்ளதாகப் புகார் எழுந்தது. அவர் முறைகேட்டில் ஈடுபட்டுத் தான் தேர்ச்சி பெற வைத்தார் என்று எழுந்த புகார் பற்றி விசாரிக்க சிபிசிஐடி போலீசார் சித்தாண்டி வீட்டிற்குச் சென்ற போது, அவர்கள் தலைமறைவானது தெரிய வந்துள்ளது. அதனால் சித்தாண்டியின் சகோதரும், காரைக்குடி சார்-பதிவாளருமான வேல்முருகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் மூலம், அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தது உறுதியானது. முறைகேட்டில் ஈடுபட்ட சித்தாண்டி தலைமறைவாக உள்ளதால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இந்நிலையில், காவலர் சித்தாண்டி மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

நாட்டறம்பள்ளி எருதுவிடும் விழா… 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

திருப்பத்தூர் நாட்டறம்பள்ளி அருகே பெரிய மூக்கனூரில் நடந்த எருது விடும் விழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி...

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு? – ஏட்டு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

ஈரோடு ஈரோட்டில் தனிப்பிரிவு தலைமை காவலருக்கு சொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு பழையபாளையம்...

’’எல்லோரும் உறவோடுதான் இருந்தோம்; இனிமேல்..’’ என்று இழுத்த அமைச்சர்

சசிகலாவுக்கு ஆதரவாகவே பேசி வந்த அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தனது நிலைப்பாட்டை மாற்றிகொண்டிருக்கிறார். சசிகலாவின் வருகை குறித்து,...

பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கொடுத்த முத்தங்கள் – சுரேஷ் சக்கரவர்த்தி இன்ஸ்டா அப்டேட்

பிக்பாஸ் சீசன் 4 முடிவடைந்து விட்டது. இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி டைட்டிலை வென்றார். இரண்டாம் இடம் பாலாவுக்கு. மூன்றாம் இடம் ரியோ, நான்காம் இடம் ரம்யா, ஐந்தாம் இடம்...
Do NOT follow this link or you will be banned from the site!