Home தமிழகம் குரூப் 2 தேர்வு முறைகேடு... அரசுப் பணியில் உள்ள 20 பேர் தலைமறைவு !

குரூப் 2 தேர்வு முறைகேடு… அரசுப் பணியில் உள்ள 20 பேர் தலைமறைவு !

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்விலும் குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. 

கடந்த ஆண்டு நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, முறைகேட்டில் சிக்கிய அனைத்து நபர்களும் வாழ்நாள் முழுவதும் இந்த தேர்வுகளை எழுத முடியாத படி  டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்விலும் குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. 

ttn

அதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவரது வீட்டில் தேர்வு எழுதிய 4 பேர் மாநில அளவில் ரேங்க் எடுத்ததாகப் புகார் எழுந்தது. அது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் காவலர் சித்தாண்டி முறைகேட்டில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவலர் சித்தாண்டி உள்ளிட்ட 3 பேர் மீது  கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் தலைமறைவாக உள்ளதால் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். குரூப் 2 முறைகேடு உறுதி செய்யப்பட்டால் அரசுப் பணியில் இருப்பவர்களின் வேலை பறிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், அரசுப் பணியில் உள்ள 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.  

மாவட்ட செய்திகள்

Most Popular

விளம்பரங்களில் கூட ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே விரிசல் – ப. சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த காங்கிரஸ் பூத் முகவர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “வேளாண் திருத்த சட்டத்தில் வரட்டு கெளரத்தை கையாள்கிறது பாஜக அரசு. பாஜக...

21 குண்டுகள் முழங்க… சிவப்பு கம்பளம் விரித்து… விடைபெற்றார் ‘அதிபர்’ டிரம்ப்!

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சிவப்பு கம்பளம் விரித்து அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டார். அமெரிக்காவின் புதிய அதிபர் அரியணை ஏறப்...

“பேஸ்புக்குடன் பயனர்களின் தகவல்களை பகிர மாட்டோம்” – எகிறிய மத்திய அரசு… பம்மிய வாட்ஸ்அப்!

பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்று மத்திய அரசின் கடிதத்துக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பதிலளித்திருக்கிறது. வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி அப்டேட் பிரச்சினை டெக்...

நோயாளியுடன் காத்திருந்த ஆம்புலன்ஸ்… ரயிலை நிறுத்தி வழிவிட்ட அதிகாரி…

மதுரை ஆம்புலன்சுக்கு வழிவிட ரயிலை நிறுத்தி கேட்டை திறந்துவிட்ட ரயில் நிலைய அதிகாரியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மதுரை...
Do NOT follow this link or you will be banned from the site!