Home ஜோதிடம் குரு பெயர்ச்சி எந்த ராசிக்கு ஏற்றம் தரும்?

குரு பெயர்ச்சி எந்த ராசிக்கு ஏற்றம் தரும்?

குடும்ப உறுப்பினர்களிடம் நிதானம் தேவை.பணியிடத்தில் சாதகமற்ற சூழல் ஏற்படும்.

இன்று 22-10-2019 செவ்வாய்கிழமை.
நல்ல நேரம்
காலை 07.45மணி முதல் 08.45வரை
மாலை 04.45 மணி முதல் 05.45வரை .
ராகு காலம்
பிற்பகல் 03.00 மணி முதல் 04.30வரை  .
எமகண்டம்
காலை 09.00மணி முதல்10.30 வரை 
சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்..
பரிகாரம்    : பால் .
மேஷம்
வாக்குவன்மையால் பெருமை அடையலாம். நற்செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான காரியங்கள் மற்றும் பணியில் உள்ளவர்களின் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : பெருமை 
பரணி : இன்னல்கள் நீங்கும்.
கிருத்திகை : மதிப்பு 
ரிஷபம்
அனுகூலமான செய்திகள் கிடைக்க பெறுவீர்கள். நிறுவனங்களில் சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். ஆபரணச் சேர்க்கைக்கான செயல் திட்டம் வகுப்பீர்கள். புதிய வேலைக்கான முயற்சிகள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : அனுகூலம் 
ரோகிணி : புகழ்ச்சி
மிருகசீரிஷம் : முயற்சி.
மிதுனம்
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மனக்கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி உண்டாகும். நண்பர்களின் ஆதரவு உண்டு. தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும்.  கடல்வழி பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : அன்பு 
திருவாதிரை : புத்துணர்ச்சி 
புனர்பூசம் : ஆதாயம் 
கடகம்
அலுவலகத்தில் உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.  பயணங்களில் நிதானம் தேவை. மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும். புதுவிதமான எண்ணங்களால் வீண் அலைச்சல்கள் மற்றும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : அனுசரிப்பு
பூசம் : நிதானம் 
ஆயில்யம் : அலைச்சல்
சிம்மம் 
அலுவலகத்தில் வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் தேவை. தொழில் சம்பந்தமான இடப்பெயர்ச்சி உண்டாகும். கணவன் மனைவிகளுக்கிடையே அனுசரித்து செல்லவும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : கவலை
பூரம் : இடப்பெயர்ச்சி 
உத்திரம் : அனுசரிப்பு.

கன்னி 
பிள்ளைகளின் மூலம் சுபவிரயம் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களால் நன்மை உண்டாகும். தொழிலில் பொறுப்புகள் கூடும். உயர் அதிகாரிகளிடம் அமைதியாக நடந்து கொள்ளவும். பயணங்களால் ஆதாயம் உண்டு. குரு பெயர்ச்சிக்குப் பிறகு ஏற்றம் வரும். அதுவரையில் பொறுமை காக்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : சுபவிரயம் 
அஸ்தம் : நிதானம் 
சித்திரை : இலாபம்
துலாம் 
தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடையலாம். புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். பெரியோர்களின் ஆசிகள் உண்டு.  பொருளாதார மேன்மை அமையும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
சித்திரை : மகிழ்ச்சி 
சுவாதி : ஆசிகள் 
விசாகம் : அனுகூலம்
விருச்சகம்
அரசு அதிகாரிகளால்ஆதரவான சூழ்நிலை உண்டாகும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். பூமி விருத்திக்கான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : காரியசித்தி 
அனுஷம் : தன்னம்பிக்கை.
கேட்டை : சாதகம்
தனுசு
செய்யும் வேலைகளில் சில தடங்கல்கள் தோன்றி மறையும். வியாபார ரீதியாக கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : தடைகள் 
பூராடம் : நிதானம் 
உத்திராடம் : விட்டுக்கொடுத்தல்
மகரம்
உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனையில் மாற்றம் உண்டாகும். மனச்சோர்வால் வசைச் சொற்களுக்கு ஆளாக நேரிடும். புதிய வாய்ப்புகளுக்கு செயல்படுத்துவதற்கான ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
உத்திராடம் : ஆரோக்கியம் 
திருவோணம் : கவனம் 
அவிட்டம் : ஆதரவு
கும்பம்
குடும்ப உறுப்பினர்களிடம் நிதானம் தேவை.பணியிடத்தில் சாதகமற்ற சூழல் ஏற்படும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் அவசியம். பயணங்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : விவேகம் 
சதயம் : விருப்பம்
பூரட்டாதி : புதிய அனுபவம் 
மீனம் 
சுபச்செய்திகள் கிடைக்கும். எண்ணங்கள் ஈடேறும். விவாதங்களில் ஆதரவான சூழல் உண்டு. திறமைகள் வெளிப்படும். பொருளாதார மேன்மைக்கான புதிய சிந்தனைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : சுபம். 
உத்திரட்டாதி : ஆதரவு  
ரேவதி : திறமை

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews