Home அரசியல் குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரித்த சுற்றுச் சூழல் துறை அமைச்சர்...!

குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரித்த சுற்றுச் சூழல் துறை அமைச்சர்…!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 21 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரித்த சுற்றுச் சூழல் துறை அமைச்சர்...!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 21 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் அப்பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. சிறிது நாட்களுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் பேருந்தில் ஏறி, பேருந்திலிருந்த பயணிகளிடம் வாக்கு சேகரித்தார். அதே போல் திமுக கழக பேச்சாளர் குடுகுடுப்பைக் காரர் வேடத்தில் சென்று வாக்கு சேகரித்தார். இந்த மாதிரியான புது வகை பிரச்சாரங்கள் இடைத்தேர்தல் களங்களில் நடைபெற்று வருகின்றன. 

Minister K.C Karupanan

அதனைத் தொடர்ந்து இன்று, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் அதிமுக சார்பாக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் முத்தமிழ் செல்வனை ஆதரித்து, விக்கிரவாண்டியில் உள்ள செம்மேடு கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மேளதாளங்கள் அமைக்கப்பட்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளங்களுக்கு ஏற்ப அமைச்சர் கே.சி கருப்பணன் உற்சாகமாக நடனம் ஆடி மக்களிடம் வாக்கு சேகரித்துள்ளார். 

 அமைச்சர் கே.சி கருப்பணன்

 

குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரித்த சுற்றுச் சூழல் துறை அமைச்சர்...!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

காதலனுடன் உல்லாச வாழ்க்கையை தொடர கணவனின் மூச்சை நிறுத்திய மனைவி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தவர் வாசு. இவரின் மனைவி சொப்பனபிரியா. திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் சொப்பன பிரியாவுக்கும் மணிகண்டன்...

மகளை காப்பாற்ற உயிரைவிட்ட தாய் – தந்தை என்ன ஆனார் என்றே தெரியவில்லை – கம்பம் சோகம்

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் அபுதாஹீர். இவரது மனைவி ஆமினா. தனியார் ஓட்டலில் வேலை செய்துவரும் அபுதாகிர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கிறார். சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில்...

பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்… 2 நண்பர்களுடன் விஷம் குடித்த இளைஞர்கள் பலி!

திருவாரூர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தந்தை கண்டித்ததால் மனமுடைந்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். உடன் விஷம் குடித்த 2 நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை இடிக்கக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்!

கலைஞர் நினைவு நூலகம் அமைக்க பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை இடிக்கக்கூடாது என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
- Advertisment -
TopTamilNews