Home இந்தியா குடியேறியவர்களை ஆதரியுங்க இல்லைன்னா தொழில்நுட்ப வளர்ச்சியை இழக்க வேண்டியது இருக்கும்.... எச்சரிக்கும் சத்யா நாதெள்ளா

குடியேறியவர்களை ஆதரியுங்க இல்லைன்னா தொழில்நுட்ப வளர்ச்சியை இழக்க வேண்டியது இருக்கும்…. எச்சரிக்கும் சத்யா நாதெள்ளா

குடியேறியவர்களை ஆதரியுங்க இல்லைன்னா தொழில்நுட்ப வளர்ச்சியை இழக்க வேண்டியது இருக்கும் என உலக நாடுகளை சத்யா நாதெள்ளா எச்சரிக்கை செய்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் ஹைதராபாத்தை சேர்ந்த சத்யா நாதெள்ளா. இவர் அண்மையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ஏதுவாக இருந்தாலும் குடியுரிமை திருத்த சட்டம் மோசமானது என பதில் அளித்தார். நாதெள்ளாவின் பதில் பா.ஜ.க.வுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.

சத்யா நாதெள்ளா

மேலும், பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி டிவிட்டரில், கல்வியறிவு பெற்றவர்களுக்கு கூட மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். குடியுரிமை திருத்த சட்டத்தின் முக்கிய காரணம், வங்க தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதாகும். அமெரிக்காவில் யேசிடிகளுக்கு பதிலாக சிரிய முஸ்லிம்களுக்கு இந்த வாய்ப்புகளை வழங்குவது எப்படி? என நாதெள்ளாவுக்கு பதிலடி கொடுத்து இருந்தார். 

வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள்

இந்த நிலையில் சத்யா நாதெள்ளா மீண்டும் ஒரு பரபரப்பான கருத்தை கூறி மீண்டும் உலக நாடுகளை தன்னை பார்க்க வைத்துள்ளார். ப்ளும்பெர்க் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சத்யா கூறியதாவது: நாடுகள் புலம்பெயர்ந்தவர்களை ஈர்க்க தவறினால், சர்வதேச தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியை அந்த நாடுகள் இழக்க நேரிடும். ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டு நலனில் உள்ளதை மறுபரிசீலனை செய்கின்றன. அரசாங்கள் அந்த அறிவொளியை தொடர்ந்து பராமரிப்பது அவசியம். அதைபற்றி குறுகிய பார்வையில் சிந்திக்ககூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘நெருங்கும் சட்டப்பேரவை தேர்தல்’ : நடிகர் விஜய் திடீர் ஆலோசனை!

சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மாணவரணி, இளைஞரணி,...

‘மாலத்தீவில் கட்டுமான பணி’ : ரூ.40 லட்சம் மோசடி செய்த தந்தை – மகன் கைது!

மாலத்தீவில் கட்டுமானப்பணி என்று கூறி தந்தை -மகன் இருவரும் ரூ.40 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஜீவா...

’டிப்ளமேஸின்னா அர்த்தம் தெரியுமா?’ வேல்முருகன் மீது மொழி வன்முறை! பிக்பாஸ் 19-ம் நாள்

பலர் ஆடும் விளையாட்டின் விதிகளுக்குள் ‘நீ மட்டும் ஒசத்தியோ!’ எனும் கொஞ்சம் பொறாமையைக் கலந்துவிட்டால், ஆட்டம் சூடு பிடிக்கும் என்பதை அறியாதவரா பிக்பாஸ். ரொம்ப அழகாக பத்த வெச்சிருக்கார். அதற்கான...

பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

மதுரை செங்குளத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மதுரை மாவட்டம் -...
Do NOT follow this link or you will be banned from the site!