குடியுரிமை மசோதா விவகாரம்! இம்ரான் கானுக்கு வித்தியாசமாக பதிலடி கொடுத்த சிவராஜ் சிங் சவுகான்……

குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு இம்ரான் கான் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்தற்கு பா.ஜ.க. தலைவர் சிவராஜ் சிங் சவுகான் வித்தியாசமாக டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இம்ரான் கான் தனது  டிவிட்டரில், சர்வதேச மனித உரிமை சட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும், பாகிஸ்தானுடனான இருதரப்பு ஒப்பந்தங்களையும் மீறும் இந்திய மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். 

இம்ரான் கான்

இது பாசிச மோடி அரசாங்கத்தால் பிரச்சாரம் செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்து ராஷ்டிரா வடிவமைப்பு விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும் என டிவிட்டரில் பதிவு செய்து இருந்தார். இம்ரான் கானின் பதிவுக்கு மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், அம்மாநில பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் வித்தியாசமாக பதில் அளித்துள்ளார். தற்போது அது டிவிட்டரில் பரபரப்பாகி வருகிறது.

சிவராஜ் சிங் சவுகான்

இம்ரான் கானின் டிவிட்டுக்கு, சிவராஜ் சிங் சவுகான், கண்ணீர் விட்டு சிரிக்கும் ஈமோஜிகளை பதிவு செய்து பதில் டிவிட் செய்துள்ளார். அதாவது குடியுரிமை மசோதா குறித்து இவரெல்லாம் பேசுகிறார் என கிண்டல் செய்து அந்த ஈமோஜிகளை பதிவு செய்து இருந்தார். சிவராஜ் சிங் சவுகானின் ரீப்ளே டிவிட் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி உள்ளது.

Most Popular

ஆக்டிவ் கேஸஸில் முதல் 10 மாநிலங்கள் இவைதாம் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

கொரோனா நோய்த் தொற்றில் உலகளவில் மூன்றாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. என்றாலும் மற்ற நாடுகளை விட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கும் செய்தியாகும். இறப்பு விகிதம் குறைவாக...

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி...

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....