Home தமிழகம் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : 650 மீட்டர் தேசிய கொடியை கையில் ஏந்தி பேரணியாகச் சென்ற இஸ்லாமியர்கள்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : 650 மீட்டர் தேசிய கொடியை கையில் ஏந்தி பேரணியாகச் சென்ற இஸ்லாமியர்கள்!

ஆலந்தூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து அக்கோ காலணி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை 650 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை கையில் ஏந்திய படி பேரணி நடத்தினர்.

குடியுரிமை சட்டத்திருத்த போராட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கின்றன. இந்த சட்ட திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. எத்தனை போராட்டங்கள் நடந்தாலும், அந்த சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. இருப்பினும், போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. 

ttn

இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னை ஆலந்தூரிலிருந்து ஆளுநர் மாளிகை வரை பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஆளுநர் மாளிகை வரை செல்வதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அங்கு திரண்ட நூற்றுக் கணக்கான மக்கள் தங்களது குடும்பங்களுடன் பேரணியில் கலந்து கொண்டனர். இதில், மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

ttn

ஆலந்தூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து அக்கோ காலணி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை 650 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை கையில் ஏந்திய படி பேரணி நடத்தினர். அதில், ” குடியுரிமை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டக்கூடாது” என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.அதன் பின்னர், அங்கு நடைபெற்ற கூட்டத்தில், குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுவதால் அதனை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

Most Popular

கர்நாடகா இடைத்தேர்தல்.. அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க…. நெருக்கடியில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சி

கர்நாடகாவில் நவம்வர் 3ம் தேதியன்று 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும்...

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச அரசு ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் குற்றம்சாட்டினார். உத்தர பிரதேசத்தில் முதல்வர்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்… புதிதாக பிரச்சினை உருவாக்காதீங்க… இக்பால் அன்சாரி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்த சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்பை வரவேற்பதாக அயோத்தி நில வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி...

ரயில்களுக்கு ரெஸ்ட் கொடுத்த அரசு…. லாக்டவுனால் நஷ்டத்தை சந்தித்த ஐ.ஆர்.சி.டி.சி.

ஐ.ஆர்.சி.டி.சி. 2020 ஜூன் காலாண்டில் ரூ.24.60 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது. இந்திய ரயில்வேயின் துணை நிறுவனம் இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்டு டூரிஸம் கார்ப்பரேஷன்...
Do NOT follow this link or you will be banned from the site!