Home சினிமா குடிபோதையில் கலாட்டா செய்த பிரபல நடிகை: கார்டனில் படுத்து தூங்கிய சம்பவம்!?

குடிபோதையில் கலாட்டா செய்த பிரபல நடிகை: கார்டனில் படுத்து தூங்கிய சம்பவம்!?

மதுபோதையில் ஹோட்டலில் நடிகை டாப்ஸி செய்த கலாட்டா பாலிவுட்டில் சிரிப்பாய் சிரிக்கிறது.

மும்பை: மதுபோதையில் நடிகை டாப்ஸி செய்த கலாட்டா பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

தமிழில் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இவர் அப்படத்தை தொடர்ந்து ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, வை ராஜா வை போன்ற படங்களில் நடித்தார். இதை தொடர்ந்து இவரது படங்கள் தமிழில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் பாலிவுட் பக்கம்  சென்ற டாப்ஸி பேபி, பிங்க் போன்ற படங்களால்  நல்ல வரவேற்பை பெற்றார். 

tapsee

இந்நிலையில், நடிகை டாப்ஸி  நடிகர் விக்கி கௌசலுடன் இணைந்து Manmarziyaan படத்தில் இணைந்து நடித்துள்ளார். அப்படம் கடந்த 2018ம் வருடம் வெளியாக  பாலிவுட்டில் வெற்றி பெற்றது. அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து நடத்தப்பட்ட பார்ட்டியில் டாப்ஸி செய்த கலாட்டா தான் தற்போது பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அதாவது இந்த படம் குறித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட விக்கி கௌசல், டாப்ஸி குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பு முடிந்து ஒரு நட்சத்திர ஹோட்டலில்  நடந்த பார்ட்டியின் போது, டாப்ஸியும், விக்கி கௌசலும் அதிக அளவில் மது அருந்தியதால் நடக்கவே முடியாமல் தடுமாறியதாகவும், அதனால் ரூம்முக்கு செல்லாமல் அடம்பிடித்த டாப்ஸி  ஹோட்டலின் கார்டன் பகுதியிலேயே படுத்து உறங்கி விட்டதாகவும் கூறியுள்ளனர். 

vicky

டாப்ஸி குறித்து விக்கி கௌசல்  கூறியிருப்பது பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

நடிகன் என்ற முகமூடி இல்லாமல் யதார்த்த மனிதனாக வந்தார் விஜய்சேதுபதி… நெகிழும் எஸ்.வி.சேகர்

அன்பு விஜய் சேதுபதி பொதுவெளியில் வரும் போது நடிகன் என்ற முகமூடியில்லாமல் ஒரு யதார்த்த மனிதனாக வருவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். MY BLESSINGS.என்று தெரிவித்திருக்கிறார் நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான...

குடும்ப தகராறில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

தேனி பெரியகுளம் அருகே குடும்ப தகராறில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி...

குளத்தில் மூழ்கி தாய், மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி தாய், மகள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம்...

சிவகங்கையில் நீர் நிலைகளில் மூழ்கி சகோதரிகள் உட்பட 4 சிறுவர்கள் பலி

சிவகங்கை சிவகங்கை மாவட்டத்தில் நேற்று இருவேறு இடங்களில் நீர்நிலைகளில் குளித்தபோது, நீரில் மூழ்கி சகோதரிகள் உள்பட 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Do NOT follow this link or you will be banned from the site!