Home தமிழகம் குடிசை வீட்டில் 21அடி ஆழத்திற்கு குழி தோண்டிய பெண்: போலீசில் வசமாக சிக்கிய மந்திரவாதி!

குடிசை வீட்டில் 21அடி ஆழத்திற்கு குழி தோண்டிய பெண்: போலீசில் வசமாக சிக்கிய மந்திரவாதி!

வீட்டிற்குள் குழி தோண்டி சில மாந்திரீக பொம்மைகள் மற்றும் சில கயிறுகளை எடுத்து அழித்தார்’ என்று கூறி பரபரப்பைக்  கிளப்பினார். 

சென்னை: பெண் ஒருவர் மந்திரவாதியின் பேச்சைக்கேட்டு  வீட்டிற்குள் 21 அடி ஆழ குழி தோண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கீழ்பாக்கத்தை அடுத்த டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர் மைதிலி. இவரது கணவர் தலைமைக் காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். மைதிலி வீட்டிலிருந்து நீண்ட நாட்களாகப் பள்ளம் தோண்டும் சத்தம் கேட்பதாக போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம்  சிறிய குடிசை வீட்டில் கொஞ்சம் கூட பாதுகாப்பு பற்றி யோசிக்காமல் 21 அடி  ஆழத்திற்குப் பள்ளம் போட்டு  வைத்திருந்தார் மைதிலி.

chennai

இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது,  வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மந்திரவாதி சுரேஷ் எங்கள் குடும்பத்துக்குச் செய்வினை செய்திருப்பதாகவும் அதனால் தான் குடும்பத்தில் பிரச்னை நடப்பதாகவும் கூறினார்.  அதனால் வீட்டிற்குள் குழி தோண்டி சில மாந்திரீக பொம்மைகள் மற்றும் சில கயிறுகளை எடுத்து அழித்தார்’ என்று கூறி பரபரப்பைக்  கிளப்பினார். 

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அமைந்தகரை தாசில்தாருக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதனால் மைதிலி வீட்டுக்கு விரைந்த வருவாய்த்துறையினர் மைதிலியிடம் விசாரணை நடத்தினர். அருகில் வசிப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் வீட்டில் உள்ள பள்ளத்தை உடனடியாக மண்ணைப் போட்டு மூடுமாறும் கூறி நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வருவாய்த்துறையினர் எச்சரித்துச் சென்றனர். 

chennai

இருப்பினும் வருவாய்த்துறையினர் எழுத்துப் பூர்வமாக போலீசில் புகார் அளித்தனர். அதில் மந்திரவாதி சுரேஷை  காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யுமாறும், மறு உத்தரவு வரும்வரை அவரை விடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

Most Popular

நாகப்பட்டினம்- வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள் கூட்டம் – கடற்கரையில் குளிக்க அனுமதியில்லை!

நாகப்பட்டினம் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.கடந்த 9 ஆம் தேதிமுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது....

“அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்க வேண்டும்” : அமைச்சர் செல்லூர் ராஜு

அதிமுக செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை தொண்டர்கள் ஏற்க வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக...

குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் புதிய செயலி: சென்னையை தொடர்ந்து அசத்தும் மதுரை காவல்துறை !

மதுரை மாநகர காவல்துறையினர் எளிதாக குற்றவாளிகளை அடையாளம் 'பேஸ் டாக்கர்' (FACETAGR) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். கொலை, கொள்ளை...

திருச்சி- பெரியார் சிலைக்கு செருப்பு மாலை- குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே பெரியார் சிலைக்கு செருப்பு மாலையிட்டு காவி வண்ணம் பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள...
Do NOT follow this link or you will be banned from the site!