குஜராத் திருமண விழாவில் கொட்டித்தீர்த்த பணமழை…!

குஜராத்தின் ஜாம் நகரில் நடந்த ஒரு திருமணவிழாவில் மணமகன் கற்றை கற்றையாக ரூபாய் நோட்டுகளை வீசிய கானொளி இனையத்தில் வைரலாகி வருகிறது.

என்னதான் நாட்டிம் பொருளாதார நிலை மந்தமானாலும்,ஜிடிபி 5 க்கும் கீழே போனாலும் விழாக்களின் போது பணத்தை அள்ளி வீசுவதை குஜராத்திகள் விடுவதே இல்லை.அது கோவில் திருவிழாவானாலும்,இசைக் கச்சேரி ஆனாலும்,திருமணவிழாக இருந்தாலும் இந்தக் கரன்சி அர்ச்சனை கண்டிப்பாகவும் கட்டுக்கட்டாகவும் நடந்தே தீரும்.

குஜராத்தின் ஜாம் நகரில் நடந்த ஒரு திருமணவிழாவில் மணமகன் கற்றை கற்றையாக ரூபாய் நோட்டுகளை வீசிய கானொளி இனையத்தில் வைரலாகி வருகிறது.

என்னதான் நாட்டிம் பொருளாதார நிலை மந்தமானாலும்,ஜிடிபி 5 க்கும் கீழே போனாலும் விழாக்களின் போது பணத்தை அள்ளி வீசுவதை குஜராத்திகள் விடுவதே இல்லை.அது கோவில் திருவிழாவானாலும்,இசைக் கச்சேரி ஆனாலும்,திருமணவிழாக இருந்தாலும் இந்தக் கரன்சி அர்ச்சனை கண்டிப்பாகவும் கட்டுக்கட்டாகவும் நடந்தே தீரும்.

wedding

குஜராத்தின் ஜாம்நகரைச் சேர்ந்தது சேலா.இங்குள்ள ரிஷிராஜ் சிங் ஜடேஜா என்கிற தொழிலதிபருக்கு கடந்த 30 தேதி திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக மணமகன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

அந்த ஊர்வலத்தின் போது மனமகன் ரிஷி ராஜ் ஜடேஜா கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை எடுத்து வீசியபடியே சென்றார்.மணமகனுடன் வந்த அவரது நண்பர்களும்,உறவினர்களும் தங்கள் பங்குக்கு நோட்டு கற்றைகளை மழைபோல் பொழிந்தனர்.பின்னர்,சேலாவிலிருந்து மணமக்கள் தனி ஹெலிக்காப்ட்டரில் அவர்களின் பூர்வீகமான கண்ட் என்கிற கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மணமகனின் அண்ணன் தம்பிக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு காரை பரிசளித்தார்.இந்தத் திருமணத்துக்கு வந்த அன்பளிப்புகள் ஐந்து கோசாலைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.மொத்தம் எவ்வளவு பணத்தை இறைத்தீர்கள் என்ற கேள்விக்கு திருமண வீட்டார் நேரடியாக பதிலளிக்காவிட்டாலும் அந்தத் தொகை ஒரு கோடியை நெருங்கி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Most Popular

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...

சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் பெரும்பாலும் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் அதிகமாக பாதக்கப்படுகின்றனர். குறிப்பாக காவலர்களும் மருத்துவர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் கொரோனாவால் எளிதில் பாதிப்படைகின்றனர். இதனிடையே நலத்திட்ட...

குடும்ப செட்அப்பில் பாலியல் தொழில்; கொள்ளை புகாரால் வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் சீக்ரெட் – போலீஸ் என மிரட்டும் கும்பல்!

சென்னை, செங்குன்றம் பாடியநல்லுர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (பெயர் மாற்றம்). லாரி டிரைவர். இவர் குடும்பத்தினரோடு கடந்த 5-ம் தேதி வீட்டில் இருந்துள்ளார். அப்போது பைக்கில் கும்பலாக சிலர் வந்துள்ளனர். அவர்கள் பிரகாஷின்...