Home இந்தியா குச்சியால் துரத்த முயன்ற இளைஞர்கள் : ஓட விட்டு விரட்டி அடித்த காட்டு யானை.. வைரல் வீடியோ !

குச்சியால் துரத்த முயன்ற இளைஞர்கள் : ஓட விட்டு விரட்டி அடித்த காட்டு யானை.. வைரல் வீடியோ !

மக்களின் சத்தத்தினால் மிரண்டு போன அந்த யானை அங்கிருந்து மெதுவாகச் சென்றுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களைச் சேதப்படுத்தி வருகின்றன. அதே போல மயூர்பஞ்ச் என்னும் பகுதியிலும் காட்டு யானை ஒன்று விளைநிலத்தில் புகுந்துள்ளது. அதனை, பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து துரத்தியுள்ளனர். மக்களின் சத்தத்தினால் மிரண்டு போன அந்த யானை அங்கிருந்து மெதுவாகச் சென்றுள்ளது. அப்போது, அங்கிருந்த இளைஞர் ஒருவர் அவர் வைத்திருந்த குச்சியால் அதனை அடித்து விரட்ட முயன்றுள்ளார். 

ttn

இதனால் ஆத்திரமடைந்த அந்த யானை திரும்பி, அந்த இளைஞனை ஓட விட்டு விரட்டியுள்ளது. அதைப் பார்த்துக் கதி கலங்கிய அந்த இளைஞன் அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளான். இந்த வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இனிமேல் காட்டு யானைகள் ஊருக்கு வந்தால், மக்கள் அதனை விரட்ட முயன்று சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் அதிகாரிகளை அழைக்குமாறு ஒடிசா மாநில வனத்துறை மக்களிடம் தெரிவித்துள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

மனைவியை பிரித்துவிட்ட சாமியார்.. ஆத்திரத்தில் குத்திக் கொலை செய்த கணவன்!

மதுரவாயல் அருகே மனைவி பிரிந்து சென்றதற்கு காரணமான சாமியாரை, கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர்...

“என் பொண்ண வாங்கிக்கோ ,என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ” -சோறு போட்ட மகளை கூறு போட்டு விற்ற பெற்றோர் .

ஒரு பெற்றோரின் 12 வயது மகளை அவர்களிடமிருந்து 10000 ரூபாய்க்கு வாங்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவின் நெல்லூர்...

மே 2இல் திமுக ஆட்சி… X factor கமல்… வெளியான அதிரடி கருத்துக்கணிப்பு!

பெரும்பாலும் ஏபிபி செய்தி நிறுவனமும் சி வோட்டர் எனும் தேர்தல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்தும் கருத்துக்கணிப்புகளுக்கும் இறுதி முடிவுக்கும் பாரிய வேறுபாடு இருக்காது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய...

தனியார் குடோனில் பதுக்கிய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கோவை கோவை அருகே தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷ்ன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டத்தில்...
TopTamilNews