Home தமிழகம் குக்கர் சின்னம் குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும்: உச்சநீதிமன்றம் அதிரடி!

குக்கர் சின்னம் குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும்: உச்சநீதிமன்றம் அதிரடி!

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குக்கர் சின்னம் குறித்து  தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும்: உச்சநீதிமன்றம் அதிரடி!

புதுதில்லி: டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக என்ற தனி கட்சியை துவங்கியுள்ள தினகரனுக்கு, அவர் போட்டியிட்ட முதல் தேர்தலிலையே அபார வெற்றியை தேடித் தந்த சின்னம், குக்கர். இந்த சின்னத்தை தக்கவைக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ec

அந்த வகையில், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட சமயத்தில், அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.ஆனால் உச்சநீதிமன்றத்தில், குக்கர் சின்னம் பொதுவான சின்னம் என்பதால், அச்சின்னத்தை அமமுகவுக்கு நிரந்தரமாக ஒதுக்க முடியாது என்றும் தேர்தல் நேரத்தில் தான் அமமுகவுக்கு எந்த சின்னம் என்று முடிவு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

sc

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்குமாறு உத்தரவிட முடியாது என தெரிவித்துவிட்டது. அதேசமயம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் வழங்கலாமா இல்லையா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் எனவும் கூறியுள்ளது.
 

குக்கர் சின்னம் குறித்து  தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும்: உச்சநீதிமன்றம் அதிரடி!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிவி பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

வேலூர் வேலூர் அருகே டிவி பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலூர் அருகே உள்ள...

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பகல் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா...

பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது? – முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த மே மாதம் 7ம் திமுக அரசு ஆட்சி அமைத்தது. அன்றைய தினமே அமைச்சரவை கூட்டம் கூடியது. இதைத் தொடர்ந்து நாளை மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது....

“கல்வெட்டு ஆய்வாளர்களை நியமனம் செய்க” : வைகோ வேண்டுகோள்!

தொல்லியல் துறையைப் பாதுகாத்திடுக கல்வெட்டு ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக அளவில்...
- Advertisment -
TopTamilNews