Home ஆன்மிகம் கிருஷ்ணபட்ச ஏகாதசி 30-5-2019 நம் முன்னோர் சாபம் விலக இன்றைய நாளை மிஸ் பண்ணாதீங்க

கிருஷ்ணபட்ச ஏகாதசி 30-5-2019 நம் முன்னோர் சாபம் விலக இன்றைய நாளை மிஸ் பண்ணாதீங்க

பொதுவாக மாதத்திற்கு இரண்டு ஏகாதசி தினங்கள் வருகின்றன. அமாவாசை நாளையும், பெளர்ணமி நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். ஏகாதச எனும் வடமொழிச்சொல் பதினொன்று என்று பொருள்படுகின்றது. அதனால் அன்றைய தினம் ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. 

கிருஷ்ணபட்ச ஏகாதசி 30-5-2019 நம் முன்னோர் சாபம் விலக இன்றைய நாளை மிஸ் பண்ணாதீங்க

பொதுவாக மாதத்திற்கு இரண்டு ஏகாதசி தினங்கள் வருகின்றன. அமாவாசை நாளையும், பெளர்ணமி நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். ஏகாதச எனும் வடமொழிச்சொல் பதினொன்று என்று பொருள்படுகின்றது. அதனால் அன்றைய தினம் ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. 

lordvishunu

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பெளர்ணமி வரையில் உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பெளர்ணமியை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருஷ்ணபட்சம் எனப்படும் தேய்பிறை காலத்தின் பதினோராம் நாளும் ஏகாதசி திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியை சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பெளர்ணமியை அடுத்த வருகிற ஏகாதசியை கிருஷ்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கிறோம்.
ஒவ்வொரு மாதமும் ஏகாதசி விரதம் இருந்தால் அந்த பரந்தாமனின் அருள் நிச்சயம் கிடைக்கும். நம் வாழ்க்கையில் எல்லா விதமான அருளையும் பெறுவதற்கான எளிய விரத முறையைக் காணலாம்…
ஏகாதசி விரத முறை

lord

ஏகாதசியன்று அதிகாலையில் எழுந்து குளித்து, அன்றைய பூஜைகளை நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்றைய நாள் முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது. அவ்வப்போது தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம். பொதுவாகவே வளர்ந்த பெரியவர்கள் மாதத்தில் இரு தினங்கள் உண்ணாநோன்பு இருப்பது உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். அந்த அடிப்படையில் இறைவனின் பெயரால் நம் முன்னோர்கள் ஆன்மிகத்தோடு ஆரோக்கியத்தையும் கலந்து போதித்து வழிவகுத்து வைத்துள்ளனர்.
அன்றைய தினம் முழுவதுமே உண்ணாநோன்பு இருக்க இயலாதவர்கள் பழங்களையும், பழச்சாறையும் உட்கொள்ளலாம். இன்றைய இயந்திர உலகில், கடவுளின் அருளையும் வி.ஐ.பி. தரிசனத்தில் பெற விரும்பும் நேரமில்லாதவர்கள், குறைந்த பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு மட்டுமாவது ஆன்ம சுத்தியோடு இறைவனின் திருநாமத்தை மனதிற்குள் உச்சரித்தவாறே, யாருடனும் பேசாமல் மெளனவிரதமிருக்கலாம். 
மறுநாள் துவாதசியன்று  காலையில்  பூஜைகளை முடித்து விட்டு, உங்களால் இயன்ற அளவிற்கு ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றுடன்  உணவருந்த வேண்டும். இவ்வாறு மாதமிருமுறைகள் வருகிற ஏகாதசியன்று விரதமிருந்து இறைவனை வழிபட்டு வந்தால் நம் முன்னோர் சாபம் விலகும்.

கிருஷ்ணபட்ச ஏகாதசி 30-5-2019 நம் முன்னோர் சாபம் விலக இன்றைய நாளை மிஸ் பண்ணாதீங்க
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மதுபோதையில் பணிக்கு வந்த மருந்தாளுநருக்கு மெமோ… திண்டுக்கல் அரசு மருத்துமனை அதிரடி!

திண்டுக்கல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்க வந்தவரிடம் மதுபோதையில் தகராறு செய்த மருந்தாளுநருக்கு, மெமோ வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி...

ஸ்டாலினிடம் அற்புதம்மாள் வைத்த திடீர் கோரிக்கை!

சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு வழங்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை...

உணவின்றி தவிப்பவர்களின் பசியாற்றும் சகோதரர்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடுகிறது. பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 10ம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் பலர்,...

எழுத்தாளர் கி.ரா.மறைவு : திருமாவளவன், தினகரன் இரங்கல்!

எழுத்தாளர் கி.ரா. உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். கி.ரா. உடலுக்கு சொந்த ஊரான தூத்துக்குடி கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவலில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் பிற்பகல்...
- Advertisment -
TopTamilNews