Home ஆன்மிகம் கிரகங்களை வெல்ல சித்தர்கள் கூறிய உணவு பழக்க வழக்கம்

கிரகங்களை வெல்ல சித்தர்கள் கூறிய உணவு பழக்க வழக்கம்

கிரகங்களின் உணவுகள்: சித்தர்கள் உணவுகள் மூலம் கிரகங்களை வெல்ல முடியும் என்று பல்வேறு கிரந்தங்களில் கூறியுள்ளனர்.ஜோதிட அடிப்படையில் சுயஜாதகத்தில் பலவீனமாக இருக்கும் கிரகங்களின் வலுவினை அதிகரிக்க அந்தந்த கிரகங்களுக்கு ஏற்றார்போல் உணவு முறைகளை நம் முன்னோர்கள் கடைபிடித்தனர்.

 

 

கீழே கூறப்பட்ட உணவுகள் அனைத்தும்  கண்டிப்பாக கிரகங்களை வலுவடைய செய்யும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை .

உடலில் இருக்கும் அனைத்து ஹார்மோன்களையும்  இவ்வகை உணவுகள் சமன் செய்யும்.உடல் உறுப்புகள் அனைத்தும் கிரக தொடர்புடையவை,உணவை சரி செய்தால் உடல் சரியாகும், உடல் சரியனால் நம்மை இயக்கும் கிரகங்கள் நம்மை தொந்தரவு செய்வது இல்லை.இப்படித்தான் நம் முன்னோர்கள் கிரகத்தை வென்றார்கள்.நீங்களும் வெல்ல முயற்சி செய்யுங்கள்.

 

சூரியன் பலம் பெற உதவும் உணவுகள்:

 

சோளம்,சிவப்பு அரிசி,கோதுமை,போன்றவை சூரியனின் உணவுகள் என்று மருத்துவ ஜோதிடத்தில் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டுள்ளது,

 

சந்திரன் பலம் பெற உதவும் உணவுகள்:

 

ஜோதிடத்தில் அடிப்படை உணவின் காரகர் சந்திர பகவான் ஆவார். நீர்,நெல்,பச்சரிசி,பால்,தயிர், போன்ற உணவுகளை உட்கொள்வதன் மூலம் சந்திரனின் ஆதிக்கத்தினை நம் உடலில் அதிகரிக்க செய்ய முடியும்.

 

செவ்வாய் பலம் பெற உதவும்  உணவுகள்:

 

ஆட்டு கறி, ஈரல், பீட்ருட்,கேரட், மல்லிச்செடி, புதினா செடி,துளசி, அனைத்து கீரை வகைகள்,முக்கியமாக அகத்தி கீரை,குதிரை வாலி தானியம், இந்த உணவுகளை உண்ண உண்ண செவ்வாய் என்னும் கிரகம் பலம் குறைவாக இருந்தலும் பலம் கூடிவிடும், மாதுளை,பேரீச்சை, செவ்வாழை,பழங்களும் செவ்வாய் பலத்தை கூட்டி விடும்.

 

புதன்  பலம் பெற உதவும்  உணவுகள்உணவுகள் :

 

பச்சை நிற காய்கறிகள்,பச்சை பயறு,சுண்டல் வகைகள்,கற்றாழை,வெங்காயம், போன்ற உணவுகள் நம் உடலில் புதன் கிரகத்தின் ஆதிக்கத்தை வலுவடைய செய்யும்.   

 

குரு பலம் பெற உதவும்  உணவுகள்:

 

குரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தொப்பையை  உருவாக்கி தருபவர்,மஞ்சள் நிற வாழைப்பழம்,பப்பாளி, அன்னாசி பழம், உலர்ந்த திராட்சை,கொண்டை கடலை,இனிப்பு வகைகள்,பழங்கள் முதலியவற்றை நம் அன்றாட உணவில் சேர்த்து வந்தால் குரு பலம் கூடும். 

 

சுக்கிரனின் பலம் பெற உதவும் உணவுகள் ;

 

சூரிய காந்தி விதைகள் பாதம் பருப்பு,சிவப்புபூசணி விதைகள் சுரைக்காய் விதைகள், நிலக்கடலை, இவை எல்லாம் சுக்ர சுக்கிலத்தின் தரத்தை உயர்த்தும்,சுக்ர பலம் இல்லாத ஜாதகர்கள் உண்டு வர சுக்கிரன் பலம் கூடி விடும் பசும்பால்,தேங்காய் பால் போன்ற உணவுகளும் சுக்கிரனின் சக்தியை அதிகரிக்கும்.

 

சனி பலம் பெற உதவும் உணவுகள்:

 

கிழங்கு வகைகள்,எள்ளு,எள்ளுருண்டை,கருப்பட்டி,பனைமர பதநீர், நொங்கு, இந்த உணவுகளை சாப்பிட்டுவர சனி கிரகத்திடம் இருந்து தாக்கத்தினை குறைத்து அந்த கிரகத்தின் பலத்தினை பெற முடியும். 

 

ராகு :

ராகு உணவு மூலம் கிடைக்கும் உடல் சக்தியை வெளியேற்ற முயற்சி செய்யும்.உலகில் உள்ள அனைத்து கெட்ட உணவுகள் மற்றும் கேடு விளைவிக்கும் உணவுகள் ,விஷ தன்மை கொண்ட உணவுகள்,என்ன என்ன இருக்கிறதோ அத்தனையும் ராகு உணவு தான்,நவநாகரீக உலகின்  அதிபதி ராகு ஆவார். பழமையை வெறுக்க வைப்பவர். மேற்கத்திய உணவுகளை ராகு ஆதிக்கம் பெற்றவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

 

கேது : 

கேது உணவின் முலம் பெறப்பட்ட சக்தியை மருந்தாக செயல்படுத்தி உடலில் தேக்கி வைக்க முயற்சி செய்யும்.மேலே சொல்லப்பட்ட எல்லா உணவுகளும் மருந்தாக மாற்றி நலம் பெற செய்பவர் கேது பகவான்.நமது உடலுக்குள் ஒரு மருத்துவர் என்றால் அது கேது பகவான் ஒருவரே ஆவார் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“காரும் போச்சு ,நகையும் போச்சே..” -கல்யாணத்திற்கு வந்தவர் பண்ண வேலையால் கதறிய மாப்பிள்ளை

ஒரு கல்யாண மண்டப வாசலில் சீர் கொடுக்க வைத்திருந்த காரையும் ,நகையையும் யாரோ  கடத்திக்கொண்டு போனதால் மாப்பிள்ளை சோகத்துடன் திருமணம் செய்து கொண்டார்

நிவர் புயலின் கோரம்: மின்கம்பத்தில் மோதி சிறுவன் பரிதாப மரணம்!

வேதாரண்யம் அருகே பெற்றோருக்கு உடை எடுத்து வரச்சென்ற சிறுவன் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நேற்று நிவர்...

தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் நால்வர் வீதியுலா!

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோவிலில் நால்வர் வீதியுலா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக...

“அமிதாப் வருவார் ,ஒரு கோடி தருவார்” -வாட்ஸ் அப் மெஸேஜால் டேமேஜ் ஆன இரு பெண்கள்.

கோடிக்கணக்கான ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக வாட்ஸ் அப்பில் வந்த மெஸ்ஸேஜை நம்பிய இருவர் , ஐந்து லட்சம் ஏமாந்த கதை பலருக்கு ஒரு பாடமாக...
Do NOT follow this link or you will be banned from the site!