Home இந்தியா காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் அசிங்கப்பட்ட சீனா....

காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் அசிங்கப்பட்ட சீனா….

நேற்று நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலின் ரகசிய கூட்டத்தில், காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க கோரிய சீனாவின் கோரிக்கையை பெரும்பாலான உறுப்பினர்கள் நிராகரித்து விட்டனர். இதனால் மீண்டும் ஒரு முறை காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் மூக்கு உடைந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதோடு, அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் அரண்டு போனது. மேலும், காஷ்மீரில் விவகாரத்தில் இந்தியா மீது உலக அமைப்புகளில் பொய் குற்றச்சாட்டுக்களை சொல்லி வந்தது. ஆனால் சீனாவை தவிர்த்து உலக நாடுகள் எதுவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாயே திறக்கவில்லை.

பாகிஸ்தான்

இதனையடுத்து, தனது நெருங்கிய நட்பு நாடான சீனா வாயிலாக பாகிஸ்தான் காயை நகர்த்த தொடங்கியது. கடந்த மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க சீனா கோரிக்கை விடுத்தது. ஆனால், பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தனது கோரிக்கையை சீனா திரும்ப பெற்றது. இருந்தாலும் பாகிஸ்தானின் தொடர் வற்புறுத்தலால் காரணமாக நேற்று நடைபெற்ற ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலின் ரகசிய ஆலோசனை கூட்டத்தில், பிற விஷயங்களின் கீழ் காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க கோரிக்கை விடுத்தது.

சீனா

ஆனால் கடந்த முறை போல் கவுன்சிலில் உள்ள மற்ற உறுப்பு நாடுகள் சீனாவின் கோரிக்கையை நிராகரித்தன. காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க இது இடம் இல்லை என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்து விட்டது. ஆக, தொடர்ந்து 2வது முறையாக இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா அசிங்கப்பட்டுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

சட்டமன்ற வரலாற்றிலும் சாதனைப்படைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

15வது சட்டப்பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இன்று தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள். கடந்த 22ஆம் தேதி துணை முதல்...

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி!

திருப்பத்தூர் காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்...

பும்ராவுக்கு திருமணமா? – 4ஆவது டெஸ்டிலிருந்து வெளியேற்றத்திற்கான பின்னணி!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் நடைபெற்றன. குறிப்பாக, மூன்றாவது போட்டி இரு நாட்களுக்கும் குறைவான நேரத்திலேயே முடிவடைந்தது. இச்சூழலில் கடைசிப் போட்டி அகமதாபாத்தில்...

‘அழிவின் விளிம்பில் கோவில்கள்’ : பக்தர்களிடம் ஒப்படைக்க சத்குரு வலியுறுத்தல்!

கோவில்களை பாதுகாக்க பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 11,999...
TopTamilNews