Home அரசியல் காஷ்மீர் மக்களை காட்டிலும் அங்கு அரசியல் செய்யமுடியவில்லை என்றுதான் காங்கிரசுக்கு அதிக கவலை- அமித் ஷா கிண்டல்

காஷ்மீர் மக்களை காட்டிலும் அங்கு அரசியல் செய்யமுடியவில்லை என்றுதான் காங்கிரசுக்கு அதிக கவலை- அமித் ஷா கிண்டல்

காஷ்மீர் மக்களை காட்டிலும் அங்கு அரசியல் செயல்பாடு குறித்துதான் காங்கிரஸ் அதிகம் கவலைப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கிண்டல் அடித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துளை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்புநிலை முழுமையாக திரும்பி விட்டது. என்னால் காங்கிரஸை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியாது. ஏனென்றால் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கியதால் அங்கு ரத்தம் சிந்தும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை.

காங்கிரஸ்

துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு கூட சுடப்படவில்லை மற்றும் அதனால் யாரும் உயிர் இழக்கவில்லை. 99.5 சதவீத மாணவர்கள் அங்கு தேர்வுகள் எழுதினார்கள். ஆனால் ஆதிர் ரஞ்சன் ஜி (காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்) இது இயல்புநிலை இல்லை என்று கூறுகிறார். ஸ்ரீநகரில் 7 லட்சம் பேருக்கு  ஓ.பி.டி. சேவைகள் கிடைத்துள்ளது, ஊரடங்கு மற்றும் 144 பிரிவு அனைத்து இடங்களிலும் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதிர் ஜி பொறுத்தவரை இயல்புநிலைக்கு அளவுகோல் அரசியல் செயல்பாடுதான்.

காஷ்மீர்

உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் நடத்தப்பட்டது குறித்து என்ன சொல்கிறீர்கள்? எந்தவொரு வன்முறை நிகழாமல் வட்டம்-ஊராட்சி தேர்தல்களில் 95 சதவீத வாக்குகள் பதிவானது. சிறையில் உள்ள அரசியல் தலைவர்களை அங்குள்ள நிர்வாகம்தான் விடுதலை செய்ய முடியும். மத்திய அரசு அவர்கள் முடிவில் தலையிடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Most Popular

சிறப்பு ஆசிரியர்களுக்கு தற்காலிகப் பணிதான்; நிரந்தர பணிக்கு வாய்ப்பு இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

சிறப்பு ஆசிரியர்கள் தற்காலிகப் பணி என்ற முறையிலேயே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிரந்தர பணிக்கு வாய்ப்பு இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தோனிக்கு CSK தந்த ஸ்பெஷல் பரிசு – உற்சாகத்தில் தோனி

இன்னும் ஒரே ஒருநாள் மட்டுமே உள்ளது ஐபிஎல் திருவிழா தொடங்குவதற்கு. அதுவும் முதல் மேட்ச்சில் தோனியின் ஆட்டத்தை இல்லை.. இல்லை மைதானத்தில் அவர் நிற்பதைப் பார்க்க அவரின் ரசிகர்கள் ஆவலோடு...

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து paytm செயலி நீக்கம்.. என்ன காரணம்?!

சூதாட்ட கொள்கையை மீறியதால் paytm செயலி ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நவீன காலத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருப்பதால், மக்களின் செல்போன்களிலேயே எல்லா தேவைகளையும்...

எல்லா மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு 10%க்கு கீழ் குறைந்துள்ளது: அமைச்சர் தகவல்!

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்திருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும்...
Do NOT follow this link or you will be banned from the site!