Home தமிழகம் காவிரி பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும்: கர்நாடக முதல்வர் குமாரசாமி வேண்டுகோள்

காவிரி பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும்: கர்நாடக முதல்வர் குமாரசாமி வேண்டுகோள்

சென்னை: 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேகதாது அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்தது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 125 ஆண்டுகால காவிரி நதி நீர் பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும். தமிழக மக்களும், கர்நாடக மக்களும் சகோதரர்கள். காவிரி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.  மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.  தமிழகத்தில் 50 சதவீத தண்ணீர் கடலில் கலக்கிறது என்றார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

நிச்சய உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும் சில உணவுகள்!

ஆரோக்கியமான உணவுகள் எது என்று ஓரளவுக்கு தெரிந்து வைத்துள்ளோம். ஆரோக்கியமில்லாத உணவு, சாப்பிட்டால் நிச்சயம் உடல்நல குறைபாட்டை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள சில உணவுகள் பற்றித் தெரியுமா... தினமும்...

ஏப்ரல் 6 மிகவும் பரபரப்பான தேர்தல் நாளாக அமையும்.. ஒரே நாளில் 475 சட்டமன்ற, 2 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல்

ஏப்ரல் 6 மிகவும் பரபரப்பான தேர்தல் நாளாக அமையும். ஏனென்றால் அன்று புதுச்சேரி மற்றும் 4 மாநிலங்களில் மொத்தம் 475 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 3 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல்...

சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா?

மனிதர்கள் பேரீச்சம் பழத்தை 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிட்டதாக ஆதாரங்கள் உள்ளன. இன்றைக்கும் பேரீச்சம் பழத்தை சுவைக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது என்ற அளவுக்கு பேரீச்சம் பழம்...

மும்பையில் கொரோனா பரவ காரணம் என்ன?… ஒரே ஒரு போட்டோ.. எளிதாக புரிய வைத்த ஆனந்த் மகிந்திரா

மக்களின் பொறுப்பற்ற நடவடிக்கையால்தான் மும்பையில் கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதை ஒரே போட்டா வாயிலாக உணர்த்தி விட்டார் ஆனந்த் மகிந்திரா. மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யமான மகிந்திரா...
TopTamilNews