Home அரசியல் காவியை பயங்கரவாதம் என்று சொல்பவர்களுக்கு ரஜினி நெத்தியடி கொடுத்துள்ளார்: அர்ஜுன் சம்பத்

காவியை பயங்கரவாதம் என்று சொல்பவர்களுக்கு ரஜினி நெத்தியடி கொடுத்துள்ளார்: அர்ஜுன் சம்பத்

எனக்கும் காவி நிறத்தைப் பூச முயற்சி செய்கின்றனர். பா.ஜ.க எனக்கு எந்த அழைப்பும் கொடுக்கவில்லை.

நடிகர் ரஜினி இன்று காலை மறைந்த இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டதற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில் அவர், எனக்கும் காவி நிறத்தைப் பூச முயற்சி செய்கின்றனர். பா.ஜ.க எனக்கு எந்த அழைப்பும் கொடுக்கவில்லை. வள்ளுவர் ஞானி சித்தர், ஞானி சித்தர்களை ஒருகுறிப்பிட சாதி மதத்திற்குள் அடக்கி விட முடியாது என்று கூறினார். 

Rajini

இது குறித்துப் பேசிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், காவி என்பது பயங்கரவாதம் இல்லை. அது ஒரு ஆன்மீகத்தின் அடையாளம். காவி நிறத்தின் மூலம் நாங்கள் எந்த மதத்தையும் திணிக்க முயற்சி செய்யவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து நாங்கள் மதத்தைத் திணிக்கிறோம் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசு விழாக்களில் குத்து விளக்கு ஏற்றித் தொடங்குவது மதத் திணிப்பு ஆகுமா? தமிழக அரசின் சின்னத்திலேயே கோபுரம் உள்ளது. அது மத திணிப்பு ஆகுமா? காவி என்பது ஆன்மீகத்தின் அடையாளம் மட்டுமே. அதனைப் பயங்கரவாதம் என்று சொல்பவர்களுக்கு ரஜினி தக்க பதில் கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

Arjun sambath

முன்னதாக, திருச்சி பிள்ளையார் பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அர்ஜுன் சம்பத் காவி நிற துண்டை அணிவித்து, திருநீறு பூசி, ருத்திராட்ச மாலை அணிவித்து கற்பூர தீபம் ஆராதனை செய்ததற்காகக்  கைதானது குறிப்பிடத்தக்கது.  

மாவட்ட செய்திகள்

Most Popular

தடையை மீறி இயக்கம்: தனியார் பேருந்துகளை திருப்பி அனுப்பிய போலீசார்!

செஞ்சியில் தடையை மீறி இயக்கப்பட்ட தனியார் பேருந்துகளை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர். வங்கக்கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக்...

‘செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் அச்சம் தேவையில்லை’ – அதிகாரிகள் தகவல்!

நிவர் புயலால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பியிருக்கும் நிலையில், மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் உரிய நடவடிக்கை...

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் : எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர்

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் இன்று செய்தியாளர்களை...

“என் புருஷன கொலை செஞ்சத போல உன் புருஷனையும் கொல்வேன்” -குடும்ப சண்டையில் நடந்த கொலை

ஒரு குடும்பத்தில் மாமா மச்சானுக்குள் நடந்த சண்டையில் மைத்துனரை தீ வைத்து கொன்ற ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தார்கள் .
Do NOT follow this link or you will be banned from the site!