Home தமிழகம் காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்; 5 போலீஸாரிடம் தொடர் விசாரணை!

காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்; 5 போலீஸாரிடம் தொடர் விசாரணை!

காவல் நிலையத்தில் இளைஞர் மரணம் அடைந்தது தொடர்பாக எஸ்பிளனேடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணசேகரனை பணி இடை நீக்கம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: காவல் நிலையத்தில் இளைஞர் மரணம் அடைந்தது தொடர்பாக எஸ்பிளனேடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை எஸ்பிளனேட்டைச் சேர்ந்த சபீர் பட்னவாலா என்பவர் வீட்டில் 32 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக எஸ்பிளனேடு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக பாரிமுனையில் உள்ள கடை ஒன்றில் பணி செய்து வந்த கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த ஜெயக்குமார், அவரது நண்பர்கள் மண்ணடி விக்னேஷ், அஜித் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இந்நிலையில், ஜெயக்குமார் காவல் நிலையத்திலேயே உயிரிழந்தார்.

போலீஸார் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாக அவரின் தாயார் வசந்தாமணி குற்றம்சாட்டினார். வலிப்பு நோயால்தான் ஜெயக்குமார் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில், காவல் நிலையத்தில் போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த இளைஞர் மரணம் தொடர்பாக காவல் ஆணையர் மேற்பார்வையில் வட சென்னை காவல் கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன் விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து எஸ்பிளனேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் குணசேகரன் நேற்று முன்தினம் இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம், தலைமைக் காவலர்கள் புகழேந்தி, விக்டர் அருள்தாஸ், லட்சுமி, காவலர் ரவி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய மதோசாக்கள் அறிமுகம்

பஞ்சாபை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானிலும் அம்மாநில அரசு மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய மதோசாக்கள் அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசு...

கமல் நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை திரும்ப பெற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது நியாயமற்றது.. திக்விஜய சிங்

கமல் நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை திரும்ப பெற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது நியாயமற்றது என்று காங்கிரசின் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்தார். மத்திய...

நடிகை ஊர்மிளாவுக்கு மேலவை உறுப்பினர் பதவி…. சிவ சேனா முடிவால் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பின்னடைவு

மகாராஷ்டிராவில் கவர்னர் ஒதுக்கீட்டில் நடிகை ஊர்மிளாவுக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்க சிவ சேனா முடிவு செய்துள்ளது. இது சிவ சேனாவின் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

கடவுளே முதல்வரானாலும் அனைவருக்கும் அரசாங்க வேலை கொடுக்க முடியாது… பா.ஜ.க. முதல்வர்

நாளையே கடவுள் முதல்வரானாலும் அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க முடியாது என்று கோவா பா.ஜ.க. முதல்வர் தெரிவித்தார். கோவாவின் பானாஜியில் அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த்...
Do NOT follow this link or you will be banned from the site!