Home தமிழகம் காவல்துறைக்கு புதியதாக 2,271 வாகனங்கள்.. கொடியசைத்துத் துவக்கி வைத்தார் முதல்வர்!

காவல்துறைக்கு புதியதாக 2,271 வாகனங்கள்.. கொடியசைத்துத் துவக்கி வைத்தார் முதல்வர்!

தமிழகக் காவல்துறைக்கு சுமார் 100 கோடி செலவில் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு பணிக்காக வாகனங்கள் வாங்கப்பட்டன.

தமிழகக் காவல்துறைக்கு சுமார் 100 கோடி செலவில் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு பணிக்காக வாகனங்கள் வாங்கப்பட்டன. காவலர்களுக்கு 1,506 பைக்குகள், 54 லாரிகள், 31 கார்கள், 50 வேன்கள், 100 சிற்றுந்துகள், 20 பேருந்துகள் என 2,271 வாகனங்கள் தமிழக அரசு சார்பில் வாங்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்களை காவல்துறைக்கு ஒப்படைக்கும் விழா தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

ttn

அந்த விழாவுக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி திரிபாதி மற்றும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் புத்தகம் கொடுத்து வரவேற்றனர். அதன் பின்னர், முதல்வர் புதிதாக வாங்கப்பட்ட 2,271 வாகனங்களில் 41 வாகனங்களைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மானியக் கோரிக்கையின் போது காவல்துறையினரின் ரோந்து பணிக்காக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்று முதல்வர் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

 

Most Popular

கர்நாடகா இடைத்தேர்தல்.. அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க…. நெருக்கடியில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சி

கர்நாடகாவில் நவம்வர் 3ம் தேதியன்று 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும்...

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச அரசு ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் குற்றம்சாட்டினார். உத்தர பிரதேசத்தில் முதல்வர்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்… புதிதாக பிரச்சினை உருவாக்காதீங்க… இக்பால் அன்சாரி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்த சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்பை வரவேற்பதாக அயோத்தி நில வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி...

ரயில்களுக்கு ரெஸ்ட் கொடுத்த அரசு…. லாக்டவுனால் நஷ்டத்தை சந்தித்த ஐ.ஆர்.சி.டி.சி.

ஐ.ஆர்.சி.டி.சி. 2020 ஜூன் காலாண்டில் ரூ.24.60 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது. இந்திய ரயில்வேயின் துணை நிறுவனம் இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்டு டூரிஸம் கார்ப்பரேஷன்...
Do NOT follow this link or you will be banned from the site!