கார் வாங்க போறீங்களா! ரூ.1.13 லட்சம் வரை சலுகை வழங்கும் மாருதி

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் பலேனோ, சியாஸ் உள்பட குறிப்பிட்ட மாடல்களுக்கு ரூ.1.13 லட்சம் வரை சலுகைகளை வழங்குகிறது. மேலும் இந்த சலுகைகள் எல்லாம் வரும் 31ம் தேதி வரை மட்டும்தான்.

இந்திய வாகனத் துறைக்கு இந்த வருஷம் போறாத காலம் போல் தெரிகிறது. மாருதி சுசுகி இந்தியா, டாடா மோட்டார்ஸ் உள்பட அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் விற்பனை இறங்குமுகமாகவே இருந்து வருகிறது. தற்போது ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் என்பதால், தங்களது கையிருப்பை காலி செய்யவும், கார் விற்பனையை அதிகரிக்கவும் பல்வேறு அதிரடி சலுகைகளை இந்த மாதம் கார் தயாரிப்பு நிறுவனங்கள்  வழங்குவது இயல்பான ஒன்று.

சியாஸ் மாடல் கார்

மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா தனது நெக்ஸா டீலர்ஷிப் வாயிலாக விற்பனை செய்யும்  பலேனோ, சியாஸ், இக்னிஸ் மற்றும் எஸ்.கிராஸ் ஆகிய மாடல் கார்களுக்கு ரூ.1.13 லட்சம் வரை அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணமாக மாருதி சுசுகி பலேனோ (பெட்ரோல்) கார் மாடலுக்கு மொத்தம் ரூ.45 ஆயிரம் வரை சலுகைகளை வழங்குகிறது. மேலும் சுசுகி பலேனோ (டீசல்) காரை வாங்கினால் ரூ.67,400 வரை சேமிக்க முடியும். 

மாருதி எஸ்-கிராஸ் மாடல் கார்

மேலும் சியாஸ், இக்னிஸ் மற்றும் எஸ்-கிராஸ் மாடல் கார்களுக்கும் மாருதி நிறுவனம் ரூ.1.13 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. ரகத்தை (பெட்ரோல்,டீசல்) பொறுத்து சலுகைகள் மாறுபடும். மேலும், இந்த சலுகைகள் வரும் 31ம் தேதி வரை மட்டுமே செல்லும் என மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

Most Popular

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...

சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் பெரும்பாலும் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் அதிகமாக பாதக்கப்படுகின்றனர். குறிப்பாக காவலர்களும் மருத்துவர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் கொரோனாவால் எளிதில் பாதிப்படைகின்றனர். இதனிடையே நலத்திட்ட...

குடும்ப செட்அப்பில் பாலியல் தொழில்; கொள்ளை புகாரால் வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் சீக்ரெட் – போலீஸ் என மிரட்டும் கும்பல்!

சென்னை, செங்குன்றம் பாடியநல்லுர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (பெயர் மாற்றம்). லாரி டிரைவர். இவர் குடும்பத்தினரோடு கடந்த 5-ம் தேதி வீட்டில் இருந்துள்ளார். அப்போது பைக்கில் கும்பலாக சிலர் வந்துள்ளனர். அவர்கள் பிரகாஷின்...