Home ஆன்மிகம் கார்த்திகை மாத ரிஷப ராசி பலன்கள் 

கார்த்திகை மாத ரிஷப ராசி பலன்கள் 

ரிஷப  ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் கார்த்திகை மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

ரிஷப ராசிக்கு இந்த மாதத்தின் முற்பாதியில் 6 ல் சூரியனும்,புதனும்,சுக்கிரனும் வீற்று இருக்கின்றனர்.மேலும் 7 ல் குரு,3ல் ராகுவும்,9ல் கேதுவும் 8ல் சனிபகவானும் 10 ல் செவ்வாய் பகவானும் வீற்று இருக்கின்றனர்.

மனதில் சோர்வு ஏற்படும். சூரியனால் சாதகமான பலன் உண்டாகாது.குரு,ராகு மாதம் முழுவதும் நன்மை தருவர். ராகுவால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மாதம் முழுவதும் குரு, செவ்வாய், ராகு சாதகமாக உள்ளனர். மாத முற்பகுதியில் புதனும் ஓரளவு நன்மை செய்வார். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

rishabam

எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்பதால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும். 

ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகையும், அவர்களால் உதவிகளும் உண்டு.

ஆனால், சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். கேதுவின் சஞ்சாரம் சரியாக இல்லாததால், உடல் நலன் அடிக்கடி பாதிக்கப்படக்கூடும். உடனுக்குடன் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. 

கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தொழில், வியாபாரம் நன்றாகவே இருக்கும். போட்டிகள் குறையும். சக வியாபாரிகள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை கவனமாகப் பயன் படுத்திக் கொள்வது அவசியம். 

rishabam

ஆசிரியர்களின் ஆலோனையை பின்பற்றினால் முன்னேற்றம் உண்டாகும். விவசாயிகளுக்கு நெல், மஞ்சள், கேழ்வரகு, பழ வகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம்.

வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். கஷ்டப்பட்டுப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.
 
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். 

rishabam

ரிஷப லக்ன பலன்கள் : மிக மிக பொற்காலமாக இருக்கும் பிரிந்த கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரம் : உடல் நலத்தில் கவனம் தேவை.

ரோகினி நட்சத்திரம் : வண்டி வாகனங்களில் கவனம் தேவை.

மிருகசீரிடம் நட்சத்திரம் : சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சந்திராஷ்டம நாட்கள் : டிசம்பர்: 8, 9, 10

அதிர்ஷ்ட எண்கள் : 2,3,6,9
 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் மற்றும் வெள்ளி
 
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
 
வழிபடவேண்டிய தெய்வம்:
மகாலட்சுமி, வெங்கடாசலபதி

பரிகாரம்: விஷ்ணுசஹஸ்ரநாமம் மற்றும் மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைத் தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்குத் துளசி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும். சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றுவதும்.செவ்வாயன்று முருகனுக்கு அபிஷேகம் செய்வதும் நன்மை பயக்கும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

நீலகிரி: தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் – வைரலாகும் வீடியோ

நீலகிரியில் தாலிகட்டும் நேரத்தில், காதலன் வந்து தன்னை அழைத்துச்செல்வதாக கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது....

மாஸ்டர் படத்தால் நஷ்டமா? விநியோகஸ்தர்களுக்கு ஆறுதல் சொல்லும் புரடியூசர்

விஜய் -விஜய்சேதிபதி இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் படம் ரிலீசுக்கு தயாராக இருந்தும், கொரோனாவினால் முடங்கிக்கிடக்கிறது. இப்படத்தின் மேல் எழுந்த எதிர்பாப்பினால் படவேலைகள் நடந்துக்கொண்டிருந்த போதே, விநியோகஸ்தர்கள் ஏரியா உரிமையை வாங்கிவிட்டதாக...

‘காதல் ஜோடி தஞ்சமடைந்த வீட்டில் கள்ள நோட்டு’ அடைக்கலம் கொடுத்ததால் சிக்கிய இளைஞர்கள்!

புதுக்கோட்டை அருகே வீட்டில் ரூ.7.5 லட்சம் கள்ள நோட்டுகளை தயாரித்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காதல் ஜோடி, திருமணத்துக்கு...

பாஜகவுக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்!

சென்னை சேப்பாக்கத்தில் பாஜகவுக்கு எதிராக திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திருமாவளவன் சமீபத்தில் யூடியூப்...
Do NOT follow this link or you will be banned from the site!