Home ஆன்மிகம் கார்த்திகை  மாத மேஷ ராசி பலன்கள் 

கார்த்திகை  மாத மேஷ ராசி பலன்கள் 

மேஷ ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் கார்த்திகை மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

மேஷ ராசிக்கு இந்த மாதத்தின் முற்பாதியில் 7ல் சூரியனும்,புதனும்,சுக்கிரனும் வீற்று இருக்கின்றனர்.மேலும் 8 ல் குரு,4ல் ராகுவும்,10ல் கேதுவும் வீற்று இருக்கின்றனர்

உங்கள் ஆட்சி நாயகன் செவ்வாய் மாதம் முழுவதும் நற்பலன்கள் கொடுப்பார். இதனால் பொருளாதார வளம் சிறக்கும். நகை, ஆபரணம் வாங்கலாம். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.அரசாங்கக் காரியங்கள் தாமதமாகவே முடியும்.

mesam

வழக்குகளால் மனதில் ஓர் அச்ச உணர்வு ஏற்படக்கூடும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். 

மாதப் பிற்பகுதியில் புதன் சாதகமாக இருப்பதால், எடுத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ஒரு சிலருக்கு திருமண முயற்சிகள் கைகூடும் சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். 
உடல் நலனில் கவனம் தேவை வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

murugan

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். 
தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்ததை விட பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். 

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கும்.மாணவர்களுக்கு மாதப் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் மிகச் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். நவ. 21,22ல் பெண்கள் மூலம் பண உதவிகள் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். நவ.17, டிச.13,14,15 ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 

மேஷ லக்ன பலன்கள்: மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான சூழ்நிலை உருவாகும். சுப காரிய தடை நீங்கும்.புதிய வண்டி வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். பொருளாதாரம் சீராகும்.

அஸ்வினி நட்சத்திரம்: தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

பரணி நட்சத்திரம் : திருமண தடைகள் நீங்கும்.

கிருத்திகை நட்சத்திரம் : அரசு துறையில் ஆதாயம் உண்டாகும்.

சந்திராஷ்டம நாட்கள் : டிசம்பர் 6, 7

அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய், வியாழன்,

அதிர்ஷ்ட எண்கள் : 1,3,6,9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிகப்பு

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், மகாலட்சுமி

பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. தினமும் காலையில் சூரிய வழிபாடு செய்வது மேன்மையான பலன்களை வளங்கும் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றுவதும் சிறந்த பலன்களைத் தரும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“பட்ட பகலில் வருவான் ,பலாத்காரம் செய்வான்” -எட்டாம் வகுப்பு மாணவியின் பரிதாப கதை

ஒரு எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவியை ஒரு 19 வயது வாலிபர் மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது...

ஜெயிச்சு தோற்ற ரம்யா… நீள வசனம் ஆரி… விட்டுக்கொடுத்த கேபி! – பிக்பாஸ் 52-ம் நாள்

எப்பாவாச்சும் நல்ல கண்டண்ட் கிடைக்கும் ஒரு டாஸ்க்கைக் கொடுக்கிறார் பிக்பாஸ். அதுல இந்த கால் செண்டர் டாஸ்க்கும் ஒண்ணு. ஆனா, அதைப் பரபரன்னு கொடுக்கணும்னு நினைக்காம, சீரியல் கணக்கா இழுத்தடிக்க...

“உன்னை வச்சிக்கத்தான் முடியும், கட்டிக்க முடியாது” -கழட்டி விட்ட காதலனின் கல்யாணத்தை நிறுத்திய காதலி.

ஒரு பெண்ணை காதலித்து விட்டு அவரை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை உறவு கொண்ட காதலனின் கல்யாணத்திற்கு முதல் நாள் அந்த காதலி...

“காரும் போச்சு ,நகையும் போச்சே..” -கல்யாணத்திற்கு வந்தவர் பண்ண வேலையால் கதறிய மாப்பிள்ளை

ஒரு கல்யாண மண்டப வாசலில் சீர் கொடுக்க வைத்திருந்த காரையும் ,நகையையும் யாரோ  கடத்திக்கொண்டு போனதால் மாப்பிள்ளை சோகத்துடன் திருமணம் செய்து கொண்டார்
Do NOT follow this link or you will be banned from the site!