Home ஆன்மிகம் கார்த்திகை மாத மீன ராசி பலன்கள் 

கார்த்திகை மாத மீன ராசி பலன்கள் 

மீன ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் கார்த்திகை மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

மீன ராசிக்கு இந்த மாதத்தின் முற்பாதியில் ராசிக்கு 8ல் சூரியனும்,புதனும்,சுக்கிரனும் வீற்று இருக்கின்றனர்.

மேலும் ராசிக்கு 11 ல் கேதுவும், 5 ல் ராகுவும், 12 ல் செவ்வாயும்,9ல் குருபகவானும் வீற்று இருக்கின்றனர். டிச.8ல் புதன் வக்கிர நிவர்த்தி அடைந்து 10-ம் இடத்திற்கு வருகிறார். இதனால் பெண்களால் பொன்,பொருள் சேரும்.

meenam

பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.உடல்நலம் பாதிக்கப்படலாம். சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக்கிறார். குருபகவானாலும் நற்பலன் அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். 

நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.

meenam

பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் வருகையால் ஆதாயம் உண்டாகும். பழுதான மின்சார, மின்னணு சாதனங்களை மாற்றி புதிதாக வாங்குவீர்கள்.

தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

நீண்டநாளாகச் செல்ல நினைத்த வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் தருவார்கள். 

பங்குசந்தை மூலம் பணம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. மாதப் பிற்பகுதியில் தாய்மாமன் வழியில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. உணவு தொடர்பாக அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.

meenam

 

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் ஆலோசனைகள் பாராட்டப்படும். சக ஊழியர்கள் கேட்கும் சந்தேகங்களைத் தீர்ப்பதுடன், அவர்களுடைய பணிகளில் உதவி செய்வீர்கள்.

மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்குப் பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும்.படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

மாணவ மாணவியர்க்குக் கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். நண்பர்களுடன் பழகுவதில் மிகவும் கவனம் தேவை. 

meenam

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமம் தரும் மாதமாக இருக்கும். ஆனாலும், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

மீன லக்ன பலன்கள்: வேலையில் பணிசுமை அதிகரிக்கும்.கணவன்  மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். 

பூரட்டாதி நட்சத்திரம்: சந்தானம் பாக்கியம் உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரம் : உழைப்பால் உயர்வுகள் ஏற்படும்.

ரேவதி நட்சத்திரம் : சுப நிகழ்ச்சிகள் உங்கள் தலைமையில் நடைபெறும்.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர்: 4, 5

அதிர்ஷ்ட எண்கள் : 1,3,9

அதிர்ஷ்டகிழமைகள் :  செவ்வாய் மற்றும் வியாழன்

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிகப்பு

வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன், தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செம்பருத்திமாலை அணிவித்து அர்ச்சனை செய்வதும், செவ்வாயன்று முருகனுக்கு அபிஷேகம் செய்வதும் திங்களன்று சிவனுக்கு வில்வ மாலை அணிவிப்பதும் மிகுந்த நற்பலன்களை தரும்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews