Home ஆன்மிகம் கார்த்திகை மாத மகர ராசி பலன்கள் 

கார்த்திகை மாத மகர ராசி பலன்கள் 

மகர ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் கார்த்திகை மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

மகர ராசிக்கு இந்த மாதத்தின் முற்பாதியில் ராசிக்கு  10ல் சூரியனும்,புதனும்,சுக்கிரனும் வீற்று இருக்கின்றனர். மேலும் ராசியில் கேதுவும், 7 ல் ராகுவும், 2ல் செவ்வாய் ,  11 ல் குருபகவானும் வீற்று இருக்கின்றனர்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.பொருளாதார வளம் மேம்படும். எடுத்த முயற்சி வெற்றி அடையும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். பூமிகாரகரான செவ்வாய் 2-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. 

makaram

அக்கம்பக்கத்தினர் வகையில் தொல்லை உருவாகும். சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். நெருப்பு,மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.

குடும்பத்தில் முன்னேற்றகரமான சம்பவங்கள் நிகழும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். டிச. 6,7ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  

makaram

உங்கள் முயற்சிகளுக்கு மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பப் பெண்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால், மாதப் பிற்பகுதியில் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம்.

வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும்.

makaram

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் படைப்புகளுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு மூத்த கலைஞர்களால் அனுகூலம் உண்டாகும். வதந்திகளைப் பொருட்படுத்தவேண்டாம்.

மாணவ,மாணவியர்க்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும்.

உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

மகர லக்ன பலன்கள் : உழைப்பு அதிகமாகவும் ஊதியம் குறைவாகும் இருக்கும்.

உத்திராடம் நட்சத்திரம் : எடுக்கின்ற முடிவுகளில் கவனம் தேவை 

திருவோணம் நட்சத்திரம் : செல்வ செழிப்பு ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரம் : நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 29, 30, டிசம்பர் 1

அதிர்ஷ்ட எண்கள் : 2,5,6

அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய்,புதன்,வெள்ளி

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், பைரவர்

பரிகாரம்: அஷ்டமி தினத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும், செவ்வாய்க் கிழமைகளில் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும். வெள்ளியன்று அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றுவதும் பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு செய்வதும் மிக சிறந்த பரிகாரம் ஆகும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

”சூரரைப் போற்று “- கேப்டன் கோபிநாத் கதை! நம்பிக்கையை விதைக்கும் படம்

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நவ.12 ல் ஓடிடியில் வெளியாக உள்ளது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள, இந்த...

ரூ.1 கோடி மதிப்புள்ள பணத்தாள்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்!

தசரா பண்டிகையை முன்னிட்டு தெலங்கானாவில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தால் கன்யகா பரமேஸ்வரி தேவி சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஹைதரபாத் அருகே கட்பவாலில் வசவி கன்யகா...

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில் காவலர் கொடி அணிவகுப்பு பேரணி

காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி,...

கூரை ஏறி கோழிபிடிக்க தெரியாதவன்… ஸ்டாலினை கடுமையாக சாடிய அமைச்சர் செல்லூர் ராஜு

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றிய கீழமாத்தூரில் ஜல் ஜீவன் மிஷன் திட்டப்பணிக்கான பூமி பூஜை தொடங்கி வைத்தார்.
Do NOT follow this link or you will be banned from the site!