Home ஆன்மிகம் கார்த்திகை மாத சிம்ம ராசி பலன்கள்

கார்த்திகை மாத சிம்ம ராசி பலன்கள்

சிம்ம ராசிக்கு ஜோதிட அடிப்படையில் கார்த்திகை மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

சிம்ம ராசிக்கு இந்த மாதத்தின் முற்பாதியில் 3ல் சூரியனும்,புதனும்,சுக்கிரனும் வீற்று இருக்கின்றனர். மேலும் 4 ல் குரு, 12 ல்ராகுவும், 6ல் கேதுவும் 5ல் சனிபகவானும் 7ல் செவ்வாய் பகவானும் வீற்று இருக்கின்றனர். கல்விகாரகனான புதன் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் வக்கிரம் அடைந்து இருக்கிறார். பகைவரால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆனாலும் புதன் டிச.8ல் வக்கிர நிவர்த்திஅடைந்து விருச்சிகத்திற்கு சென்ற பின் நிலைமை சீராகும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

simmam

எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவிக் கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. 

வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும்.அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்படச் சாத்தியமுள்ளது.

simmam

புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். அரசாங்க வகையில் கிடைக்கவேண்டிய அனுமதிகள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படலாம்.கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

மாணவ மாணவியர்க்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.பெண்களின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.குழந்தைகளால் பெருமை சேரும். டிச.7 க்கு பிறகு அந்தஸ்து அதிகரிக்கும்.கணவரின் பாராட்டுகள் கிடைக்கும்.அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குச் சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். 

simmam

சிம்ம லக்ன பலன்கள் : புதிய முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும். அரசு சார்ந்த விஷயங்களில் தடை தாமதம் உண்டாகும்.

மகம் நட்சத்திரம் : உடல் நலத்தில் கவனம் தேவை.

பூரம் நட்சத்திரம் : உடல் உழைப்பு அதிகமாகும்.

உத்திரம் நட்சத்திரம்: பயணங்கள் ஏற்படும்.

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 18, 19, 20

அதிர்ஷ்ட எண்கள் : 1,3,6,9

அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, மஞ்சள்.

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான், ஆஞ்சநேயர்

 

பரிகாரம்: திங்கள்தோறும் சிவபெருமானுக்கு வில்வதளத்தால் அர்ச்சனை செய்வதும், சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும் வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் உத்தமம்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews