Home ஆன்மிகம் கார்த்திகை மாத கும்ப ராசி பலன்கள் 

கார்த்திகை மாத கும்ப ராசி பலன்கள் 

கும்ப ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் கார்த்திகை மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

கும்ப ராசிக்கு இந்த மாதத்தின் முற்பாதியில் ராசிக்கு 9ல் சூரியனும், புதனும்,சுக்கிரனும் வீற்று இருக்கின்றனர்.மேலும் ராசிக்கு 12 ல் கேதுவும், 6 ல் ராகுவும், ராசியில் செவ்வாயும் , 10 ல் குருபகவானும் வீற்று இருக்கின்றனர்.

டிச.8ல் புதன் வக்கிர நிவர்த்தி அடைந்து 10-ம் இடத்திற்கு வருகிறார். இதனால் பெண்களால் பொன், பொருள் சேரும்.

kumbam

 சுக்கிரன், சனி, ராகுவால் நன்மை அதிகரிக்கும். மற்ற கிரகங்கள் சுமாரான நிலையில் இருந்தாலும் பாதிப்பு உண்டாகாது. செல்வாக்குக்கு குறைவு ஏற்படாது. பொருளாதார வளம் சிறக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

சகோதரிகள் மிக உறுதுணையாக செயல்படுவர்.சுக்கிரன் தற்போது 9-ம் இடமான தனுசில் இருக்கிறார். இதனால் குடும்பத்தில் வசதி பெருகும். குடும்பத்தினர் மத்தியில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் நன்மை உண்டாகும்.

காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். 

kumbam

புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும்.

குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். 

பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

சிலருக்குத் தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

kumbam

வெளியூர்ப் பயணங்களின் போது கைப்பொருட்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.

உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. 

வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும்.கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும்.

kumbamhj

பிரபல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

மாணவ,மாணவியர்க்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். 

கும்ப லக்ன பலன்கள் : உடல் நலத்தில் கவனம் தேவை.

அவிட்டம் நட்சத்திரம் : புதிய வீடு மனை வாங்குவீர்கள்.

சதயம் நட்சத்திரம் : சமுகத்தில் அந்தஸ்து உயரும்.

பூரட்டாதி நட்சத்திரம் : உங்களால் பலருக்கு உதவிகள் கிடைக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர்: 2, 3

அதிர்ஷ்ட எண்கள் : 2,6

அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள் மற்றும் வெள்ளி

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், துர்கை

பரிகாரம்: செவ்வாயன்று கேதுவுக்கு அர்ச்சனை செய்வதும் வெள்ளியன்று துர்க்கை வழிபாடு செய்வதும் சுவாதியன்று நரசிம்மருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும் மிகுந்த நன்மை தரும்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews