Home உணவு காய்கறி வாங்கும் போது இதையெல்லாம் கவனத்துல வெச்சுக்கோங்க...

காய்கறி வாங்கும் போது இதையெல்லாம் கவனத்துல வெச்சுக்கோங்க…

காய்கறியை வாங்குவதற்கும் ஒரு பக்குவம் இருக்கு. அதுவும், இது பற்றி தெரியாதவங்க காய்கறி வாங்கப் போனா, கடைக்காரன், கடையில இருக்கிற முற்றினது,சொத்தையானதுன்னு பொறுக்கிப் போட்டு பில் போடுவான். 

வெண்டைக்காயை உடைச்சுப் பார்த்து வாங்கணும், முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்து வாங்கணும்னு சொல்றதெல்லாம் சும்மா கிடையாதுங்க.. நிஜமாகவே ஒவ்வொரு காய்கறியை வாங்குவதற்கும் ஒரு பக்குவம் இருக்கு. அதுவும், இது பற்றி தெரியாதவங்க காய்கறி வாங்கப் போனா, கடைக்காரன், கடையில இருக்கிற முற்றினது,சொத்தையானதுன்னு பொறுக்கிப் போட்டு பில் போடுவான். 

இந்தப் பக்கத்தை எட்டிப் பார்க்கும் ஆண்களுக்குமே இந்த தகவல்கள் ரொம்ப பயனுள்ளதா இருக்கும். இனி, ஞாபகமா இதையெல்லாம் மனசுல வெச்சிருந்து, ப்ரெஷ்ஷான காய்கறியை வாங்கிக்கிட்டு போய் உங்க வீட்டுல அசத்துங்க!முருங்கைக்காய்

அவரைக்காயின் விதைகள் புடைத்துக் கொண்டு காணப்பட்டால் அவை நன்கு முற்றிய காய் என்று தெரிந்து, தவிர்த்து விட வேண்டும். தக்காளிப் பழங்களை முற்றிலும் பழுக்காத படி உள்ளதாக பார்த்து வாங்கினால் இரண்டொரு நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.வாழைத்தண்டை நாமாக கிள்ளிப் பார்க்கவேண்டும். நார் தெரிந்தால் முற்றிவிட்டதாக அர்த்தம்.  நூல் தெரிந்தால் வாங்கலாம்.

பூக்கள் பூத்து விட்ட கீரைகளை வாங்கக் கூடாது. அதில் எந்த சத்துக்களுமே இருக்காது. சுத்தம் செய்வதும் எரிச்சலான வேலை. அப்புறம், அந்த கீரையை சமைச்சு, சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் உங்களுக்கு திட்டு விழும்.நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சௌசௌ , பீர்க்கங்காய் போன்றவற்றை நகத்தினால் அழுத்திப் பார்க்கவேண்டும். நகம் இறங்கினால் இளசு என்று விளங்கிக் கொண்டு வாங்கலாம். நகம் இறங்காவிட்டால் வாங்கக் கூடாது. அவை முற்றல்.முட்டைக்கோஸ்

கருணைக் கிழங்கு நன்கு சிவந்த நிறத்துடன் இருந்தால் அது நல்ல கிழங்கு.சீக்கிரமாகவும் வெந்துவிடும்.
கிழங்கு வகைகள், வெங்காயம் , வாழைக்காய் போன்றவற்றை வாங்கும் போது இவற்றை அழுத்திப் பார்க்கவேண்டும். அழுந்தினால் வாங்கக் கூடாது. அவை உள்ளுக்குள் அழுகியிருக்கும்.

வெண்டைக்காயின் கூர்மையான நுனிப் பகுதியை விரலால் உடைத்துப் பார்க்க வேண்டும். நன்கு எளிதாக ஒடிபட்டால் அவை பிஞ்சு என அர்த்தம் வாங்கலாம். உடைக்க முடியாத வெண்டைக்காய்கள் எல்லாமே முற்றல். ஆண்களில் மட்டுமல்ல… வெண்டைக்காயிலும் முற்றல் விலை போகாது. வெண்டைக்காய்

முருங்கைக்    காயின் கணுக்கள் தெரியாமல் சீராக இருக்கவேண்டும்.கத்திரிக்காயின் மேல் தோல் சுருக்கம் விழாமல் பளபளப்பாக பூச்சி விழாததாக பார்த்து வாங்க வேண்டும்.காலிப்ளவரை வாங்கும்போது பூத்து விரிந்ததை வாங்கக்கூடாது. அவை சுவையாகவும் இருக்காது. காலிப்ளவர் பூ வெண்மையாகவும், அழுத்தமாகவும் இருக்கவேண்டும்.

முட்டைக்கோஸ் இலை பிரியாதபடி சற்று பச்சையாக இருப்பதை பார்த்து, தேர்ந்தெடுக்க வேண்டும். 
முட்டைகள் சற்று கனமாக இருக்கவேண்டும். நீரிலிட்டால் மூழ்க வேண்டும். அவைதான் நல்ல முட்டைகளாகும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு : மத்திய அரசு பகீர் தகவல்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்கியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இன்று புதிதாக 16,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும் 113 பேர் கொரோனாவுக்கு...

மீண்டும் இந்தியில் கடிதம்… எழுதிய அமைச்சருக்கே திருப்பி அனுப்பி சு. வெங்கடேசன் எம்பி சம்பவம்!

மத்திய கலாச்சார அமைச்சகம் சு. வெங்கடேசன் எம்.பிக்கு இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட மீறல்களைச் செய்தால் களைத்துப் போய் எதிர்ப்பைக் கைவிட்டு விடுவோமென்று நினைக்காதீர்கள்...

இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில், போக்குவரத்துக் கழக அதிகாரி பலி!

திருப்பூர் பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் போக்குவரத்து கழக அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை...

மனைவியை பிரித்துவிட்ட சாமியார்.. ஆத்திரத்தில் குத்திக் கொலை செய்த கணவன்!

மதுரவாயல் அருகே மனைவி பிரிந்து சென்றதற்கு காரணமான சாமியாரை, கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர்...
TopTamilNews