Home சினிமா காமெடி பிடிச்சுது... திரைக்கதை சுவாரஸ்யமில்லை... தயா அழகிரியின் தர்பார் விமர்சனம்!

காமெடி பிடிச்சுது… திரைக்கதை சுவாரஸ்யமில்லை… தயா அழகிரியின் தர்பார் விமர்சனம்!

தர்பார் படத்தின் காமெடி பிடித்திருந்தது, ஆனால் திரைக்கதை சவாரஸ்யமாக இல்லை என்று அழகிரியின் மகனும் பல படங்களை தயாரித்தவருமான தயாநிதி அழகிரி தெரிவித்துள்ளார்.

தர்பார் படத்தின் காமெடி பிடித்திருந்தது, ஆனால் திரைக்கதை சவாரஸ்யமாக இல்லை என்று அழகிரியின் மகனும் பல படங்களை தயாரித்தவருமான தயாநிதி அழகிரி தெரிவித்துள்ளார்.
அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி ட்விட்டரில் ரஜினியின் தர்பார் படம் பற்றிய விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அதில், “தர்பார் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஒன் மேன் ஷோ. யோகி பாபு உடனான காமெடி காட்சிகளை ரசித்தேன். இது ரஜினிகாந்த் – செந்தில் காமெடியை நினைவுபடுத்தியது. நிவேதா தாமஸ் சிறப்பாக நடித்துள்ளார். இருப்பினும் திரைக்கதை கொஞ்சம் அதிருப்தியை தந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

 

தர்பார் படம் பற்றி பாசிடிவ், நெகட்டிவ் கமெண்ட்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இது வழக்கமான முருகதாஸ் படம் போல இல்லை. ரஜினிகாந்த்தை வைத்து எடுக்கிறோம், அவரை மாஸாக காட்ட வேண்டும் என்று மெனக்கெட்டுக் கதை, திரைக்கதையில் முருகதாஸ் கோட்டைவிட்டுவிட்டார் என்று கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews