கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவி அங்குள்ள நூற்றுக்கணக்கான மக்களை பலிகொண்டுள்ளது. சீனாவை மட்டுமல்லாது, கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் போண்டாமணிக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இதனால் போண்டா மணிக்கு பலரும் வாய்ப்பு தர மறுப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து போண்டா மணி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘காமெடி நடிகர் போண்டா மணி“கொரோனா வைரஸால்” பாதிக்கப் பட்டுள்ளதாக ஒரு YouTube சேனலில் தவறான தகவலை பரப்பியுள்ளனர். இது முற்றிலும் வதந்தி! அவர் நலமாகவுள்ளார். படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்! தன்னைப் பற்றி தவறாக வரும் பொய் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என போண்டா மணி கேட்டுக்கொண்டார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.