காமெடியில் கலக்கும் இரட்டையர்கள்!

காமெடி நடிகர்களான யோகிபாபு மற்றும்  ரவிமரியாவும் இணைந்து புதிய திரைப்படம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

சென்னை: காமெடி நடிகர்களான யோகிபாபு மற்றும்  ரவிமரியாவும் இணைந்து புதிய திரைப்படம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வடிவேல் நடிக்காமல் இருப்பது சினிமாவில் காமெடி பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரது இடத்தை இப்போது யோகிபாபுவும், இயக்குநர் ரவிமரியாவும் நிரப்பியிருக்கிறார்கள். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்திற்குப் பிறகு வில்லத்தனம் செய்து கொண்டிருந்த ரவி மரியாவின் கேரியரில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  

ரவிமரியா எங்கு போனாலும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்குகிறார்கள். இவருக்கு ரசிகர்கள் கூட்டத்தால் தொடர்ந்து காமெடி வேடத்தில் நடிக்க வைத்தார்கள் இயக்குநர்கள்
இப்போது ரவி மரியாவையும், யோகிபாபுவையும் வைத்து கூர்க்கா என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து வருகிறார் இயக்குநர் சாம் ஆண்டர்சன். இவர்  ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து டார்லிங் படத்தை எடுத்தவர்.

ரவி  மரியாவும், யோகிபாபுவும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். நரேன் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து ரவி மரியா இயக்குநர் எழில் இயக்கத்தில் வழக்கம்போல் முழு காமெடியனாக படம் முழுவதும் வரப்போகிறார். நல்ல எழுத்தாளர்கள் அமைந்தால் ரவி மரியா காமெடி காட்சியில் கலக்குவார்.

Most Popular

மூணாறு நிலச்சரிவில் இதுவரை 8 பேர் பலி !

தென் மேற்கு பருவமழையால் கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. அதன்படி கேரள மாநிலம் இடுக்கி...

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு பல்வேறு நிதியுதவியும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. சமீபத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை...

வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன் தற்கொலை

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன்(54) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்தமாதம் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவர், வாழ பிடிக்கல்லை என்று கடிதம்...

சகோதரிகள் இடையே சேனல் மாற்றுவதில் பிரச்னை… கண்டித்த தாய்… வேதனையில் உயிரை மாய்த்த மகள்

சகோதரிகள் இடையே டிவி சேனல் மாற்றுவதில் தகராறு ஏற்பட்டதால் தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மூத்த மகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின். இவர்...