Home இந்தியா காந்தியை சுட்டவர் ஒரு தேசபக்தர்- பாஜக வேட்பாளர்

காந்தியை சுட்டவர் ஒரு தேசபக்தர்- பாஜக வேட்பாளர்

தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்ட நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்ட நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார்.

கடந்த 12 ஆம் தேதி அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என தெரிவித்திருந்தார். கமலின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டங்கள் எழுந்தன. அதேபோல் சிலர் கமலுக்கு ஆதரவாகவும் பேசினர். கமல் பேச்சுக்கு எதிராக பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இதனால் முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் போபாப் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர், “ நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராகவே இருந்தார் தற்போதும் இருக்கிறார். இனியும் தேச பக்தராகவே இருப்பார். கோட்சேவை தீவிரவாதி என்று கூறியவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம்” என தெரிவித்துள்ளார். பிரக்யா சிங்கின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

வேடச்சந்தூரில் வடமாநில ஒப்பந்ததாரரிடம் ரூ.13.9 லட்சம் பறிமுதல்!

திண்டுக்கல் வேடச்சந்தூர் அருகே சாலை ஒப்பந்ததாரர் உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துவந்த 13 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

’’நான் நல்ல பாம்பு ஒரே கடியில் உன்னை காலி செய்துவிடுவேன்’’ மோடி மேடையில் பஞ்ச் அடித்த மிதுன் சக்கரவர்த்தி

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, கடந்த கடந்த 2014ம் ஆண்டில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலங்களவை எம்.பி. ஆனார். ஆனால், சாரதா ஊழலில் அவர் பெயரும் அடிபட்டதால்...

தமிழகத்தில் முற்றிலுமாக குறைந்த கொரோனா உயிரிழப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியே 70 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 25 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய...

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்து நான்கு கட்டங்களாக நாட்டில் ஊரடங்கு போடப்பட்டது. சிறப்பு விமானங்கள், சரக்கு விமானங்கள் தவிர மற்ற உள்நாட்டு...
TopTamilNews