Home தமிழகம் காதல் ­தி­ரு­ம­ணம் செய்த மக­ளுக்கு கண்­ணீர் அஞ்­சலி பேனர் வைத்த தந்தை!

காதல் ­தி­ரு­ம­ணம் செய்த மக­ளுக்கு கண்­ணீர் அஞ்­சலி பேனர் வைத்த தந்தை!

காதல்… மொழி, இனம், வயது, வசதி எல்லாம் பார்த்து வருவதல்ல என்பது சமூகத்தில் அவ்வப்போது நிரூபணமாகிக் கொண்டு வந்தாலும், பெற்றோர்கள் சமூக அந்தஸ்தையும், சாதியையும் காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பவங்களும் இன்னொரு பக்கம் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது

காதல்… மொழி, இனம், வயது, வசதி எல்லாம் பார்த்து வருவதல்ல என்பது சமூகத்தில் அவ்வப்போது நிரூபணமாகிக் கொண்டு வந்தாலும், பெற்றோர்கள் சமூக அந்தஸ்தையும், சாதியையும் காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பவங்களும் இன்னொரு பக்கம் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில், காதலனே முக்கியம் என்று வீட்டை விட்டு வெளியேறி, காவல் நிலையத்தில் தஞ்சமான தனது மகளுக்கு வேலூர் மாவட்டம் ஆம்பூரில், ‘கண்ணீர் அஞ்சலி’ பேனர் வைத்திருக்கிறார் ஒரு தந்தை. அவரது செயல் அந்த பகுதியையே பரபரப்பாக்கியிருக்கிறது. 

marriage

வேலூர் மாவட்­டம் ஆம்­பூரை அடுத்த குப்­ப­ராஜ பாளை­யம் பகுதி­யைச் சேர்ந்த தம்­பதிகள் சரவணன் மற்றும் யுவராணி. பால் வியாபாரம் செய்து வந்த இவர்­க­ளுக்கு 21 வயதில் ஒரும­கள் இருக்கிறார். இவர், அதே பகுதி­யைச் சேர்ந்த சரவணன் என்ற வாலிபரை காத­லித்து வந்­துள்­ளார்.
சரவணன் வேறு சமூ­கத்தைச் சேர்ந்­தவர் என்­ப­தால் தன் மகளின் காத­லுக்கு தந்தை சரவணன் எதிர்ப்பு தெரிவித்தார். பெற்­றோ­ரின் எதிர்ப்­பை­யும் மீறி காத­லனுடன் அந்த இளம் பெண் வீட்டை விட்டு வெளி­யேறி திருமணம் செய்து கொண்­டார்.
இந்நி­லை­யில், தனது பெற்­றோர் மற்றும் குடும்­பத்­தி­ன­ரால் தனக்கும், தனது காதல் கணவருக்கும் ஆபத்து ஏற்­பட்­டுள்­ளது என்­றும், எனவே தங்­க­ளுக்கு பாது­காப்பு வேண்டும் என்­றும் ஆம்பூர் மக­ளிர் காவல் நிலை­யத்­தில் இளம் பெண் புகார் கொடுத்­தார்.

poster

இத­னையடுத்து, சரவணன், யுவராணி ஆகி­யோரை போலீசார் பேச்சு வார்த்­தைக்கு அழைத்து பேசியுள்­ள­னர். ஏற்கெனவே மகளின் காதல் விவகாரத்தினால் அதிர்ச்சியடைந்திருந்த சரவணனுக்கு, மகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது இன்னும் கோபத்தை வரவழைத்தது. மகள் மீது இருந்த கோபம் தீராத சரவணன், ‘தனது மகள் இறந்துவிட்டாள்’ என்று கூறி காவல் நிலையத்தை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், தனது மகள் இறந்து விட்டார் என்­பதை வெளிப்­படுத்­தும் வகை­யில் ஊர் முழு­வதும் சரவணன், மகளுக்கு கண்ணீர் அஞ்­சலி பேனரை வைத்துள்­ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சசிகலாவுக்கு வைரஸ் பாதிப்பின் தன்மை குறைந்துள்ளது- மருத்துவமனை அறிக்கை

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூருவிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை காலம் முடிவடைந்ததால் அவர், சிறையிலிருந்து ஜனவரி மாதம் 27ஆம் தேதி...

வரும் 26ஆம் தேதி திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 26 ஆம் தேதி 12 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய...

32 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம்- முதல்வர் பழனிசாமி

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துறையாடலில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி,...

முதலீட்டாளர்களை ஏமாற்றிய இந்த வார பங்கு வர்த்தகம்.. 5 தினங்களில் சென்செக்ஸ் 156 புள்ளிகள் சரிவு..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. சென்செக்ஸ் 156 புள்ளிகள் குறைந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரத்தின்...
Do NOT follow this link or you will be banned from the site!