காதல், தகாத உறவால் 44 ஆயிரத்து 412 கொலைகள்…அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

இந்தியாவில் கொலைக்கான காரணத்தைத்  தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆய்வு செய்துள்ளது.

இந்தியாவில் கொலை குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஒவ்வொரு குற்ற சம்பவத்துக்குப் பின்னால் ஒரு பின்னணி உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் கொலைக்கான காரணத்தைத்  தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆய்வு செய்துள்ளது.

crime

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2011 முதல் 2017 ஆம் ஆண்டுகளில் தனிநபர் பழிவாங்குதல் அடிப்படையில் சுமார் 67 ஆயிரத்து 774 கொலைகள் நடந்துள்ளன. அடுத்த படியாக சொத்து பிரச்னை காரணமாக 51 ஆயிரத்து 554 கொலைகள் அரங்கேறியுள்ளன.

murder

அடுத்தபடியாக காதல் விவகாரம், முறையற்ற உறவு ஆகியவை சம்பந்தமாக நடந்த  குற்றச்சம்பவங்கள் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 44 ஆயிரத்து 412 கொலைகள் நடந்துள்ளன. இதில் 2016 ஆம் ஆண்டு மட்டும் 71 ஆணவ கொலைகளும், 2017 இல் அது 93 ஆக உயர்ந்துள்ளதும்’  கவனிக்கத்தக்கது. 

Most Popular

சாதித்த இ.பி.எஸ் அரசு: 3 ஆண்டுகளாக தேசிய விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக தமிழக பொருளாதார வளர்ச்சி விகிதம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது என்பதை காட்டும் வகையில் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள்...

மூணாறு நிலச்சரிவில் இதுவரை 8 பேர் பலி !

தென் மேற்கு பருவமழையால் கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. அதன்படி கேரள மாநிலம் இடுக்கி...

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு பல்வேறு நிதியுதவியும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. சமீபத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை...

வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன் தற்கொலை

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன்(54) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்தமாதம் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவர், வாழ பிடிக்கல்லை என்று கடிதம்...