Home சினிமா காதலும் வேணாம்; கல்யாணமும் வேணாம்: கடுப்பான கிசுகிசு நடிகர்!

காதலும் வேணாம்; கல்யாணமும் வேணாம்: கடுப்பான கிசுகிசு நடிகர்!

தமிழ் சினிமாவின் ரொமாண்டிக் நடிகர்களில் ஒருவரான கிசுகிசு நடிகர் விரக்தியில் தனக்கு கல்யாணமே வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம்.

காதலும் வேணாம்; கல்யாணமும் வேணாம்: கடுப்பான கிசுகிசு நடிகர்!

தமிழ் சினிமாவின் ரொமாண்டிக் நடிகர்களில் ஒருவரான கிசுகிசு நடிகர் விரக்தியில் தனக்கு கல்யாணமே வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம்.
 
இளம் வயதிலேயே ஹீரோவான கிசுகிசு நடிகருக்கு சர்ச்சைகள் என்றாலே சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது போல் தான். காதல் கிசுகிசு தொடங்கி ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமானார். கரியரில் அதள பாதாளத்திற்கு சென்றாலும், ரசிகர்களின் அளவில்லா அன்பினால் மீண்டும் ஒரு ரவுண்டு வந்துக் கொண்டிருக்கிறார்.
 
ஹேண்ட்சம் ஹீரோ என்பதால் திரையுலகில் பல முன்னணி நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார். கிசுகிசுக்களில் கோலொச்சிய நடிகருக்கு எந்த காதலும் கைக்கூடவில்லை. இதனாலேயே அவரது வாழ்வில் கரியரிலும் பல சருக்கல்களை சந்தித்தார். 
 
கிசுகிசு நாயகனாகவே எத்தனை நாள் தான் சுற்றுவது, மகனை பொறுப்பான குடும்பத் தலைவனாக மாற்ற வேண்டும் என்ற ஆசையில், நடிகரின் பெற்றோர் பெண் பார்க்கும் படலத்தை தீவிரப்படுத்தினர். எங்கு சென்றாலும் உங்கள் பையனின் பெயர் இல்லாத காதல் கிசுகிசுக்களே திரையுலகில் இல்லையே, எப்படி பெண் கொடுப்பது என பெண்ணை பெற்றவர்கள் கேட்கிறார்களாம். இதையும் தாண்டி பெண் கொடுக்க யாரேனும் முன் வந்தால் அவர்களை நம்ம ஹீரோவுக்கு பிடிக்கவில்லையாம்.
 
இப்படி பார்க்கும் பெண்ணை எல்லாம் ஏதாவது சாக்கு சொல்லி தட்டிக் கழித்தால் எப்படி? சீக்கிரம் திருமணம் செய்துக் கொள் என நம்ம ஹீரோவை பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்களாம். இதனால் கடுப்பான ஹேண்ட்சம் ஹீரோ, எனக்கு காதலும் வேணாம், கல்யாணமும் வேணாம், நான் சிங்கிளாவே வாழ்ந்துக்கிறேன் என விரக்தியில் கூறிவிட்டாராம். பாவம் அவர் மட்டும் என்ன செய்வார்?

காதலும் வேணாம்; கல்யாணமும் வேணாம்: கடுப்பான கிசுகிசு நடிகர்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை Vs திருப்பூர்! 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

ஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை?- சத்குரு அதிரடி

ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற 3 நாள் யோகா நிகழ்ச்சி ஜூலை 23 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதும்...

17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக நிர்வாகி கைது

சேலம் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக வார்டு கவுன்சிலர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்.
- Advertisment -
TopTamilNews