Home குற்றம் உள்ளூர் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் தற்கொலை

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் தற்கொலை

இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். சாதியைக் குறிப்பிட காரணம், வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றால் குடும்பம், சொந்தம், கவுரவம் என பழைய டயலாக்விட வாய்ப்பிருக்கிறது. அதுவும்கூட பழைய பஞ்சாங்கம்தான். இவர்கள் இருவரும் ஒரேசாதியைச் சேர்ந்தவர்களாக இருந்ததால், காதலுக்கு பெரிதாக எதிர்ப்பு இருக்காது என சிறகடித்து பறந்திருக்கின்றன காதல் கிளிகள்.

இது ஏதோ கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு செய்தின்னு சுலபமாக கடந்துபோக முடியவில்லை. காரணம் இது நடந்தது 30-40 ஆண்டுகளுக்கு முன்பல்ல. இதோ நேற்று. கும்பகோணத்தைச் சேர்ந்த ரவீந்திரனின் மகன் சுரேஷுக்கும் (27) அதேப்பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் மகள் சரண்யாவுக்கும் (22) கடந்த 4 வருடங்களாக காதல். இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். சாதியைக் குறிப்பிட காரணம், வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றால் குடும்பம், சொந்தம், கவுரவம் என பழைய டயலாக்விட வாய்ப்பிருக்கிறது. அதுவும்கூட பழைய பஞ்சாங்கம்தான். இவர்கள் இருவரும் ஒரேசாதியைச் சேர்ந்தவர்களாக இருந்ததால், காதலுக்கு பெரிதாக எதிர்ப்பு இருக்காது என சிறகடித்து பறந்திருக்கின்றன காதல் கிளிகள்.

Couple Suicide

ரெண்டு வீட்டுலயும் அப்பாக்கள் காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றாலே அடுத்தது என்ன, மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதுதானே? பார்க்க ஆரம்பித்தார் சுவாமிநாதன். சரண்யா எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. காதலர்கள் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். சுரேஷ் வீட்டில் யாரும் இல்லாத நாளாக பார்த்து சரண்யா அவர் வீட்டுக்கு வருவதென்றும், அங்கே தான் தயாராக வைத்திருக்கும் தாலியைக் கட்டி கணவன் மனைவி ஆவதென்றும் முடிவெடுத்தனர். இதுவரை சரி, எல்லாம் மங்களம். ஒண்ணும் பிரச்னை இல்லை. ஆனால், திருமணம் முடிந்தபின், இருவரும் எலி மருந்தை தின்று வீட்டிலேயே மணக்கோலத்தில் குற்றுயிரும் குலையுயிருமாக கிடப்பதை வீட்டிற்கு திரும்பிய சுரேஷின் பெற்றோர் பார்த்து, பதறி, மருத்துவமனைக்கு கொண்டுசென்று டாக்டர்களிடம் கதறியிருக்கின்றனர். அமங்களம். பெற்றோர் நால்வருக்கும் வாழ்நாள் வதையை விதைத்து சென்றுவிட்டன காதல் பறவைகள்!

Most Popular

‘காய் வெட்டும் கத்தியால் கணவனை கொன்ற மனைவி’.. இயற்கை மரணம் என நாடகமாடியது அம்பலம்!

கோவை அருகே கணவனை மனைவியே கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை வெரைட்டி ஹால் சாலை அருகே இருக்கும் திருமால் வீதியில்...

2.48 கோடி பேர் குணமடைந்தனர் – உலகளவில் கொரோனா நிலவரம்

செப்டம்பர் 29-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம். உலகம்...

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு? அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் திரையரங்குகளை விரைவில்...

ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதும் மாணவி- குவியும் பாராட்டுகள்!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், ஒரே நேரத்தில், இரண்டு கைகளையும் பயன்படுத்தி எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கண்களைக் கட்டிக் கொண்டு , இரண்டு...
Do NOT follow this link or you will be banned from the site!