காதலில் விழுந்த நடிகை டாப்ஸி: இவரை தான் திருமணம் செய்ய போகிறாராம்!?

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  டாப்ஸியிடம் வருண் தவான், அபிஷேக் பச்சன், விக்கி கௌசல்  மூவரில் யாரைத்  திருமணம் செய்ய விரும்புகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்

நடிகை டாப்ஸி பாலிவுட் நடிகர் ஒருவரை  திருமணம் செய்ய ஆசைப்படுவதாக வெளிப்படையாகக் கூறியுள்ளார். 

தமிழில் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இவர் அப்படத்தை தொடர்ந்து ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, வை ராஜா வை போன்ற படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து இவரது படங்கள் தமிழில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் பாலிவுட் பக்கம்  சென்ற டாப்ஸி பேபி, பிங்க் போன்ற படங்களால்  நல்ல வரவேற்பைப் பெற்றார்.

tapsee

இவர் நடிகர் விக்கி கௌசலுடன் இணைந்து Manmarziyaan படத்தில் இணைந்து நடித்துள்ளார். அப்படம் கடந்த 2018ம் வருடம் வெளியாகப்  பாலிவுட்டில் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் நண்பர்களான டாப்ஸியும் விக்கி கௌசலும் பொது இடங்களில் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர். 

tapsee

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  டாப்ஸியிடம் வருண் தவான், அபிஷேக் பச்சன், விக்கி கௌசல்  மூவரில் யாரைத்  திருமணம் செய்ய விரும்புகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்  விக்கி கௌசல் என்று பதிலளித்துள்ளார். முன்னதாக டாப்ஸி குறித்துப் பேசிய விக்கி கௌசல், ‘அவர் ஒரு நபர் மிகவும் வெளிப்படையானவர் மற்றும் ஒரு சிறந்த பேச்சாளர். நான் அவரது கேட்பவர் மட்டும் தான்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

tapsee

ஏற்கனவே டாப்ஸியும் விக்கி கௌசலும் ஒன்றாகச் சுற்றி வரும் நிலையில் தனது திருமண ஆசை பற்றி டாப்ஸி வெளிப்படையாகக் கூறியிருப்பது அவர்கள்  காதலிப்பதை உறுதி செய்துள்ளதாக கிசுகிசுக்க படுகிறது. 

Most Popular

மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...