Home தமிழகம் காதலியை கடத்தி பாலியல் வன்கொடுமை: ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்ற போது விபரீதம்

காதலியை கடத்தி பாலியல் வன்கொடுமை: ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்ற போது விபரீதம்

சுற்றுலா சென்ற போது, காதலனை தாக்கி அவரது காதலியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகர சம்பவம் ஏற்காட்டில் அரங்கேறியுள்ளது

சேலம்: சுற்றுலா சென்ற போது, காதலனை தாக்கி அவரது காதலியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகர சம்பவம் ஏற்காட்டில் அரங்கேறியுள்ளது.

ஈரோட்டை சேர்ந்த வாசுதேவன் என்பவர் தனது காதலியுடன் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இருவரும் அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது சண்டையில் முடிந்துள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த காதலி விடுதியில் இருந்து வெளியேறியுள்ளார். அவரை தேடி வாசுதேவனும் பின்னாலேயே வந்துள்ளார். இதனை கவனித்துக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் கார் ஓட்டுநர் என இருவர், வாசுதேவனை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும், அவரது காதலியை பின் தொடர்ந்து சென்று அவரை சேலத்தில் இறக்கி விடுவதாக கூறி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கடத்தி சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து வாசுதேவன், ஏற்காடு காவல் நிலையத்திலும், வாசுதேவனின் காதலி கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுநர் விஜயக்குமார் மற்றும் கார் ஓட்டுநர் ஆரோக்கியதாஸ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

டிராவில் முடிந்த பரபரப்பான போட்டி – ஹைதராபாத் Vs ஜாம்ஷெட்பூர் #ISL

ISL கால்பந்து திருவிழாவில் நேற்று இரவு 7.30 மணிக்கு கோவாவின் திலக் மைதானத்தில் ஹைதராபாத் Vs ஜாம்ஷெட்பூர் அணிகளுக்குமான போட்டி நடந்தது. நேற்றைய நிலவரப்படி, ஹைதராபாத்...

“ஜனவரியில் கட்சித் துவக்கம்” மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் : ரஜினிகாந்த் ட்வீட்!

ஜனவரி மாதம் கட்சி தொடங்கவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், " வரப்போகிற...

“முஸ்லிமா மாறிடு இல்லேன்னா என்னை விட்டு ஓடிடு” -மதம் மாற சொல்வதாக கணவன் மீது புகார்

ஒரு இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஒரு முஸலிம் வாலிபர் ,அந்த பெண்ணை திடீரென முஸ்லீம் மதத்திற்கு மாற சொல்லி கொடுமைப்படுத்தியதால் போலீசார்...

கொரோனா காலத்திலும் அசராத ஆப்பிள் வாட்ச்!

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆப்பிள் நிறுவன மின்னணு பொருட்கள் தரத்தில் மட்டுமல்ல, வடிவமைப்பிலும் ஈர்ப்பதால் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளதுகொரோனா காலத்திலும் அசராத ஆப்பிள்...
Do NOT follow this link or you will be banned from the site!