Home உலகம் காதலால் வந்த விபரீதம்! கிஸ் கொடுக்குறதுக்கு ஒரு இடம் வேண்டாமா! பறிபோன காதலியின் உயிர்...

காதலால் வந்த விபரீதம்! கிஸ் கொடுக்குறதுக்கு ஒரு இடம் வேண்டாமா! பறிபோன காதலியின் உயிர்…

பெரு நாட்டில் ஆபத்தான பாலத்தில் அமர்ந்து முத்தம் கொடுத்து கொண்டிருந்த காதலர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெரு நாட்டில் ஆபத்தான பாலத்தில் அமர்ந்து முத்தம் கொடுத்து கொண்டிருந்த காதலர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெத்தலஹேமை சேர்ந்த  மேபெத் எஸ்பினாஸ் மற்றும் ஹெக்ட்டார் ஆகிய இருவரும் காதல் ஜோடிகள். இருவரும் அப்பகுதியிலிருக்கும் மேம்பாலம் ஒன்றில் இருவரும் கைக்கோர்த்து நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓரிடத்தில் அமர்ந்து பேச நினைத்தனர். அதனால் பாலத்தில் செல்லும் வழியிலேயே பாலத்திலிருந்த கட்டையின் மீது அமர்ந்து பேச தொடங்கினர். ஹெக்ட்டார் மேம்பால தடுப்பு கட்டையின் மீது அமர்ந்த படியும், மேபெத் அவருக்கு எதிராக நின்ற படியும் இருந்து சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நெருக்கத்தை அதிகரித்து கட்டிப்பிடித்துக்கொண்ட இருவரும் முத்தம் கொடுக்க முயன்றுள்ளனர்.

தங்களை அறியாமல் இருவரும் கொடுத்த முத்தத்தின் போது ஹெக்ட்டார் நிலைத்தடுமாறி தடுப்புக் கட்டையிலிருந்து பின்புறமாக கவிழ்ந்து 50 அடி உயர பாலத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த ஹெக்ட்டார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் விழுந்த மேபெத் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவரும் முத்தம் கொடுத்த வீடியோவும், அதனால் உயிரிழந்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகிவருகிறது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

5 நாளில் ரூ.2.18 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்குச் சந்தை… முதலீட்டாளர்கள் குஷி…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 722 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில்...

கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் – கமாண்டோ வீரர்கள் பங்கேற்பு!

தர்மபுரி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தீயணைப்புத்துறை சார்பில் தர்மபுரியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது!

தாடிக்கொம்பு அகர முத்தாலம்மன் கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் வரலாற்றுத் தகவல்கள் இருக்கும்...
Do NOT follow this link or you will be banned from the site!