Home க்ரைம் காணாமல் போன 4 வயது சிறுவன் மயானத்தில் பிணமாக கிடந்த கொடூரம்: தேனியில் பரபரப்பு!

காணாமல் போன 4 வயது சிறுவன் மயானத்தில் பிணமாக கிடந்த கொடூரம்: தேனியில் பரபரப்பு!

 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 தேனி : 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு நான்கு வயதில் ஹரிஷ் என்ற மகன் உள்ளார் . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு  முருகனும் கீதாவும் பிரிந்து வேறுவேறு நபர்களைக்  திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் வசித்து வந்தனர். குழந்தை ஹரிஷ் மட்டும் கீதாவின் தாய் வீட்டில் வளர்ந்து வந்தான். இதனால் அவன் அடிக்கடி முருகன் மற்றும் கீதா வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளான். 

crime

இந்நிலையில் சிறுவன் ஹரிஷ்  நேற்று முன்தினம் திடீரென்று காணாமல் போன நிலையில் குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கோம்பை காவல்நிலையத்தில்  உறவினர்கள்  புகார் கொடுத்தனர். இதையடுத்து  கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள மயானம் ஒன்றில் ஹரிஷ் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த சிறுவனின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். 

police

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுவனின் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஈரோட்டுக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வருகை

ஈரோடு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வந்தடைந்தன. ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ்...

ஆந்திராவின் அம்மப்பள்ளி அணையில் 900 கன அடி நீர் திறக்கப்பட இருப்பதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆந்திராவின் அம்மப்பள்ளி அணையில் 900 கன அடி நீர் திறக்கப்பட இருப்பதால் திருவள்ளூர் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த...

கார்த்திகை தீபா திருவிழா – மண் விளக்கு உற்பத்தி தீவிரம்

ஈரோடு கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, ஈரோட்டில் மண் விளக்கு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வரும் 29ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா...

BREAKING புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், இவர் அழகர் சாமியின் குதிரை, நான் கடவுள், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் தவசி. இவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....
Do NOT follow this link or you will be banned from the site!