Home தமிழகம் காஞ்சிபுரம் அருகே வெடித்தது பேரீச்சம்பழத்திற்கு போடப்பட்ட ராணுவ ராக்கெட்?

காஞ்சிபுரம் அருகே வெடித்தது பேரீச்சம்பழத்திற்கு போடப்பட்ட ராணுவ ராக்கெட்?

வாங்கின வியாபாரிக்கும் அதனுள் இருக்கும் விபரீதம் புரியவில்லை. ஸ்க்ராப் என நினைத்து பழைய இரும்பு சாமான்கள்மேலே வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு, குட்டி யானையில் ஊர்ஊராக ‘பழைய இரும்பு சாமானுக்கு பேரீச்சம்பழம்’ என சுற்றிவந்திருக்கிறார்.

காஞ்சிபுரம் அருகே அனுமந்தபுரம் என்ற இடத்தில் ராணுவத்திற்கு சொந்தமான பயிற்சி மையம் உள்ளது. ராணுவத்தினருக்கு ஆயுதப்பயிற்சி வழங்கும் இந்த மையத்திலிருந்து சில மாதங்களுக்கு முன்பு, பயன்பாட்டில் இல்லாத பழைய இரும்பு பொருட்களை வியாபாரி ஒருவர் வாங்கி சென்றுள்ளார். அதிகாரிகள் தவறோ இல்லை கவனக்குறைவோ தெரியவில்லை, பழைய இரும்பு சாமான்களுக்குள் ராக்கெட்டை பற்ற வைக்கும் பொறியும்,, சில வெடிக்காத ஷெல்களும் சேர்த்து விலைவைத்து விற்கப்பட்டிருக்கின்றன. வாங்கின வியாபாரிக்கும் அதனுள் இருக்கும் விபரீதம் புரியவில்லை. ஸ்க்ராப் என நினைத்து பழைய இரும்பு சாமான்கள்மேலே வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு, குட்டி யானையில் ஊர்ஊராக ‘பழைய இரும்பு சாமானுக்கு பேரீச்சம்பழம்’ என சுற்றிவந்திருக்கிறார். அவ்வாறு ஊர் சுற்றும்போது காஞ்சிபுரம் கங்கை அம்மன் கோவில் குளமருகே வரும்போது தெரிந்தோ தெரியாமலோ மேற்படி விபரீத ஆயுதங்கள் கீழே விழுந்து மண்ணில் புதையுண்டன.

Gangai Amman temple

அந்த கங்கை அம்மன் கோவில் குளத்தில் ஒரு அத்திவரதர் இல்லாமல் போனதன் விளைவு, குளத்தின்பக்கம் ஒருவரும் வருவதில்லை. திடீரென கடந்த ஞாயிறு மதியம் நண்பர்கள் ஆறேழு பேர் அந்தப்பக்கமாக போகும்போது, ராக்கெட் பொறி வெளியே தெரிந்திருக்கிறது. தீபாவளிவேறு பக்கத்தில் வருவதால், அதனை சாதாரணமாக கருதி தூக்கிப்போட்டு விளையாடிருக்கிறார்கள். திடீரென பொறி வெடித்து இருவர் இறக்க, படுகாயத்துடன் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். காஞ்சிபுரத்தில் குண்டுவெடிப்பா? இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் வந்ததெல்லாம் உண்மைதானா? என காவல்துறை அலறி அடித்து ஓடிவந்து பார்த்த காவல்துறையின் விசாரணையில் ஸ்க்ராப் மெட்டீரியல் என தெரியவந்திருக்கிறது. பக்கத்துலேயே வெடிக்காத ஷெல் ஒன்றும் கிடந்திருக்கிறது. நல்லவேளையாக அவர்கள் இந்த ஷெல்லோடு விளையாடவில்லை, ஒருவேளை அப்படியாகிருந்தால், இன்னும் விபரீதமாகியிருக்கும்!
 

Most Popular

‘நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கைது செய்க’; விவசாய சங்கத் தலைவர் திடீர் போராட்டம்!

திருச்சி அருகே சாலை அமைக்கும் நெடுஞ்சாலைத் துறையினரை கைது செய்யக்கோரி விவசாய சங்கத் தலைவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். திருச்சி துவாக்குடியில் சாலையை விரிவுப்படுத்துவதற்காக அப்பகுதியில்...

ஓ.பி.எஸ் உடன் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சந்திப்பு!

துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது சலசலப்பு நீடிக்கும்...

இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா; ஒரே நாளில் 1,179 பேர் மரணம்!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதே சூழலில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்...

முக்திக்கு வழி கொடுக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம்!

புதன் பகவானுக்குரிய தெய்வமான மகாவிஷ்ணுவை வணங்குவதற்கு உரிய நாளாக புதன்கிழமை சொல்லப்படுகிறது.பல தெய்வங்களுக்கும் சகஸ்ரநாமங்கள் இருந்தபோதும் சகஸ்ரநாமம் என்றதும் நம் நினைவுக்கு வருவது விஷ்ணு சகஸ்ரநாமமே. இந்நாளில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை...
Do NOT follow this link or you will be banned from the site!