Home தமிழகம் காஞ்சிபுரத்தில் மக்களிடம் கொரோனா சோதனை செய்த 7 பேருக்கு கொரோனா உறுதி

காஞ்சிபுரத்தில் மக்களிடம் கொரோனா சோதனை செய்த 7 பேருக்கு கொரோனா உறுதி

காஞ்சிபுரத்தில் கொரோனா சோதனையில் ஈடுபட்ட 7 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கொரோனா சோதனையில் ஈடுபட்ட 7 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. அத்துடன் கொரோனா நோய்க்கு இதுவரை தமிழகத்தில் 74 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக எப்போதும்போல சென்னையில் 332 பேருக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரிசோதனைக்காக காஞ்சிபுரத்தில் மக்களிடம் சளி மாதிரிகளை சேகரித்து ஈடுபட்ட 7 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று களத்தில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்னணி சுகாதார பணியாளர்களுக்கு தொடர்ந்து கொரோனா நோய்த் தொற்று பரவி வருவது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

அதிமுகவிலிருந்து வெளியேறியது ஏன்? சரத்குமார் விளக்கம்!

சமகவை அழைத்து அதிமுக பேசும் என காத்திருந்தோம் என்று சரத்குமார் தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சமத்துவ...

“பாலியல் குற்றச்சாட்டுகளை மறைக்க முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” – உச்ச நீதிமன்றம் காட்டம்!

பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்குகளைக் கம்பளத்தின் அடியில் மறைக்க முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட நீதிபதி ஒருவர்...

ஆர்.எஸ்.பாரதியின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பட்டியலின மக்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனக் குரலை எழுப்பிய ஆதி தமிழர்...

காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன்…கமல்ஹாசனை சந்தித்த பின்னர் சரத்குமார் உருக்கம்

கேட்கிற இடங்களை கொடுக்காவிட்டால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவோம் என்று இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து முன்னர் சொல்லியது போலவே, அக்கூட்டணியில் இருந்து விலகிவிட்டார். சமகவை கூட்டணி...
TopTamilNews