Home இந்தியா காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி..

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி..

காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரைத் தேர்வு செய்யுங்கள் என்று ராகுல் காந்தி வெளிப்படையாக அறிவித்துள்ளார். 

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரைத் தேர்வு செய்யுங்கள் என்று ராகுல் காந்தி வெளிப்படையாக அறிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி செல்வாக்கு பெற்ற  தொகுதியான அமேதியில் பாஜக நிர்வாகி ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.

rahul

இதன் காரணமாகக் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு மாநில  தலைவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து ராகுல்காந்தியும் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால்  அவருடைய ராஜினாமா கடிதம் இன்னும் காரியக்கமிட்டியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும்  காங்கிரஸ் மூத்த தலைவர் பலரும் ராகுல்காந்தியின் ராஜினாமா செய்யக் கூடாது என்று வலியுறுத்தினர்.

rahul

இந்நிலையில், ‘தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இல்லை. ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டேன். காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரைத் தேர்வு செய்யுங்கள். புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான கூட்டத்தை உடனே கூட்டுங்கள்’ என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

பிரேமலதா விருப்ப மனு தாக்கல் : எந்த தொகுதியில் போட்டி?

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விருப்ப மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின்...

ஜெயலலிதா இல்லாத அதிமுகவுக்கு இந்த நிலைமையா?… இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் பொழிவிழக்கிறதா அதிமுக?

ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும்போது தேர்தலில் போட்டியிட தொண்டர்களால் விருப்ப மனு கொடுக்கப்படும்நிகழ்வு திருவிழா போல நடைபெறும். அதேவேளையில் இறுதி வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிடுவதற்கு முன்பாகவே பரபரப்பு தொற்றிவிடும்....

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிரச்னையா? தினேஷ் குண்டுராவ் விளக்கம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடித்து விட கணக்கு போட்டிருக்கும் திமுக, ஐபேக் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது. ஐபேக்கின் பரிந்துரையின் பேரிலேயே கட்சியின் அனைத்து செயல்பாடுகளும் இருக்கின்றன. அதில், தொகுதி பங்கீடு...

“என்னோட கார் பார்க்கிங்கில் ஏண்டா இப்படி செஞ்சே?” -தட்டி கேட்ட பக்கத்து வீட்டுக்காரருக்கு நேர்ந்த கதி.

பக்கத்து வீட்டுக்காரரின் கார் பார்க்கிங்கில் கார் நிறுத்திய தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார் .
TopTamilNews